SEBI வெளியிட்ட புதிய உத்தரவின் படி, இனி அனைத்து ஸ்டாக் புரோக்கர்களும் தங்களது வெப்சைட் மற்றும் ட்ரேடிங் ஆப்-களில் முதலீட்டாளர் விழிப்புணர்வு வாசகங்களை கட்டாயம் காட்ட வேண்டும். இதற்கான காலக்கெடு அக்டோபர் 5 முதல் தொடங்குகிறது.
இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான SEBI, சில்லறை முதலீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய விதியைக் கொண்டுவந்துள்ளது. 'Project Jagrook' என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, இனி அனைத்து புரோக்கிங் தளங்களும் முதலீட்டாளர் விழிப்புணர்வு வாசகங்களைக் கட்டாயமாகப் பதிவிட வேண்டும்.
அமல்படுத்தப்படும் காலவரிசை:
- அக்டோபர் 5, 2026: புரோக்கர்களின் அனைத்து வெப்சைட்களிலும் இந்த விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் ரிஸ்க் டிஸ்க்ளோசர்களை (Risk Disclosures) காட்ட வேண்டும்.
- நவம்பர் 1, 2026: இந்த விதிமுறைகள் மொபைல் ட்ரேடிங் ஆப்-களுக்கும் விரிவுபடுத்தப்படும். ஆப்-களின் லேண்டிங் பக்கத்தில், விழிப்புணர்வு வாசகங்களும் ரிஸ்க் டிஸ்க்ளோசர்களும் மாறி மாறி (Alternate) வருமாறு அமைக்க வேண்டும்.
ஏன் இந்த மாற்றம்?
பங்குச்சந்தையில் நடக்கும் தேவையற்ற ஊக வர்த்தகத்தைக் (Speculative Trading) குறைக்கவும், போலி தளங்களில் இருந்து முதலீட்டாளர்களைக் காக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் இந்தி மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் இருக்க வேண்டும் என்று SEBI அறிவுறுத்தியுள்ளது. இது 'Samajh Se Investing Simple' என்ற பிரச்சாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
தற்போதுள்ள புரோக்கர்கள் தங்களது தொழில்நுட்பக் கட்டமைப்பை (Digital Infrastructure) அக்டோபர் மாதத்திற்குள் மாற்றியமைக்க வேண்டும். இந்த மாற்றங்கள் முதலீட்டாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும், புரோக்கிங் நிறுவனங்களுக்குப் புதிய இணக்கத்தன்மை (Compliance) சவால்களைக் உருவாக்கியுள்ளது.
