இனி ஆன்லைன் பாண்ட் பிளாட்ஃபார்ம்களில் (OBPP) முதலீடு செய்வது பாதுகாப்பானதாக மாறும். வரும் அக்டோபர் 7, 2026 முதல் 'Credit Risk-o-Meter' வசதியை கட்டாயமாக்கி SEBI புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
முதலீட்டாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, கடன் பத்திர சந்தையில் (Debt Market) வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க SEBI புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. அக்டோபர் 7, 2026 முதல், அனைத்து ஆன்லைன் பாண்ட் பிளாட்ஃபார்ம் நிறுவனங்களும் (OBPPs) தங்களது தளத்தில் 'Credit Risk-o-Meter' எனப்படும் நிறம் சார்ந்த குறியீட்டை காட்ட வேண்டும்.
ரிஸ்க் மீட்டர் எப்படி செயல்படும்?
இது வெறும் வட்டி விகிதங்களை மட்டும் காட்டாமல், அந்த பத்திரத்தில் உள்ள ரிஸ்க்கை தெளிவாக விளக்கும். AAA முதல் D வரை உள்ள கிரெடிட் ரேட்டிங்குகளை 6 விதமான ரிஸ்க் நிலைகளாக இந்த மீட்டர் பிரிக்கும். இதில் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், ஏதேனும் ஒரு பத்திரத்தின் கிரெடிட் ரேட்டிங் மாறினால், அடுத்த 24 மணி நேரத்திற்குள் பிளாட்ஃபார்ம்கள் அந்த ரிஸ்க் மீட்டரை அப்டேட் செய்ய வேண்டும்.
'அன்செக்யூர்டு' பாண்டுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
அதிக லாபம் தருகிறோம் என்ற பெயரில் முதலீட்டாளர்களை ஏமாற்றும் முயற்சியை தடுக்க, அடமானமில்லாத (Unsecured) கடன் பத்திரங்களை இனி 'Unsecured' என்று சிவப்பு நிறத்தில் (Bold Red Text) தெளிவாக குறிப்பிட வேண்டும். இது முதலீட்டாளர்களுக்கு அந்த பத்திரத்தில் இருக்கும் பாதுகாப்பு குறைபாட்டை உடனடியாக உணர்த்தும்.
கவனிக்க வேண்டியவை:
இந்த புதிய வசதி வெளிப்படைத்தன்மையை அதிகரித்தாலும், முதலீட்டு முடிவுகளை எடுக்கும் பொறுப்பு முதலீட்டாளரிடமே உள்ளது. கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும்போது 'Credit Risk' மட்டுமின்றி, சந்தை வட்டி விகித மாற்றங்கள் மற்றும் 'Liquidity Risk' ஆகியவற்றையும் கணக்கில் கொள்வது அவசியம். நீங்கள் முதலீடு செய்யும் பிளாட்ஃபார்ம், பங்குச் சந்தையில் முறையான உரிமம் பெற்ற ஸ்டாக் புரோக்கரா என்பதை உறுதி செய்து கொள்வது நல்லது.
