இந்திய பங்குச்சந்தைகள் ஒரு முக்கிய மாற்றத்திற்கு தயாராகி வருகின்றன. ஆகஸ்ட் 3, 2026 முதல், சந்தையின் முடிவில் 'Closing Auction Session' (CAS) என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனுடன் வர்த்தக நேரங்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
இனி சந்தை முடிவு இப்படித்தான்!
இந்திய பங்குச்சந்தைகளில், குறிப்பாக Futures & Options (F&O) பிரிவில், வர்த்தகம் இனி மாலை 3:15 மணிக்கே நிறைவடையும். மற்ற சாதாரண பங்குகள் வர்த்தகம் 3:30 மணி வரையிலும், இன்டெக்ஸ் மற்றும் பங்கு F&O ஒப்பந்தங்களுக்கான வர்த்தகம் 3:40 மணி வரையிலும் நடைபெறும். சந்தை தொடங்கும் நேரம் மாறாது.
தற்போது, சந்தை முடிவடையும் நேரத்தில் நடக்கும் வர்த்தகத்தின் அடிப்படையில் (volume-weighted average) இறுதி விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், இந்த புதிய முறையில், 'Closing Auction Session' மூலம் அனைத்து பெரிய ஆர்டர்களும் ஒரு குறிப்பிட்ட விலையில் ஒருங்கிணைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் இறுதி விலை முடிவு செய்யப்படும். இது உலக சந்தைகளான நியூயார்க் மற்றும் லண்டன் பங்குச்சந்தைகளின் நடைமுறையைப் போன்றது.
ஏன் இந்த மாற்றம்?
இந்த புதிய முறையின் முக்கிய நோக்கம், சந்தையின் இறுதி விலையை மேலும் துல்லியமாக நிர்ணயிப்பதுதான். பெரிய முதலீட்டாளர்கள் (Institutional Investors), Passive Funds, ETFs போன்றவை, சந்தை மூடும் நேரத்தில் அதிக பங்குகளை வாங்கி அல்லது விற்று, தங்கள் benchmark விலையை அடைய முயற்சிப்பார்கள். இதனால் சில சமயங்களில் திடீரென விலை ஏற்ற இறக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. புதிய 'Auction Session' மூலம், இதுபோன்ற பெரிய ஆர்டர்கள் ஒரே நேரத்தில், ஒரே விலையில் செயல்படுத்தப்படும். இதனால், இறுதி விலை ஸ்திரத்தன்மை பெறும், மேலும் விலைmanipulation குறைவதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இன்ட்ராடே வர்த்தகர்களுக்கு முக்கிய அறிவிப்பு
Marging Intraday Square-off (MIS) பயன்படுத்தும் ஆக்டிவ் டிரேடர்கள் இந்த புதிய நேர மாற்றத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். Auto square-off நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. Auction Session-ல் பங்குபெறும் பங்குகளுக்கான trades 3:10 மணிக்கும், பங்குபெறாத பங்குகளுக்கான trades 3:20 மணிக்கும், F&O ஒப்பந்தங்களுக்கான square-off 3:25 மணிக்கும் நடக்கும். இந்த புதிய நேரங்களுக்கு ஏற்ப தங்கள் வர்த்தக உத்திகளை மாற்றியமைப்பது அவசியமாகும்.
