உலக சந்தையில் Sensex Options-ன் ஆதிக்கம்
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பெரிதாகப் பயன்படுத்தப்படாத Sensex Options, இன்று உலகின் மிகவும் சுறுசுறுப்பான ஒப்பந்தங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இந்த மிகப்பெரிய வெற்றிக்கு, சிறந்த Product Design, Expriy தேதிகளில் செய்யப்பட்ட முக்கிய மாற்றங்கள், மற்றும் முதலீட்டாளர்களுடனான வலுவான ஈடுபாடு ஆகியவை காரணமாக கூறப்படுகிறது.
வெற்றியின் பின்னணி காரணங்கள்
சந்தை தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், சரியான Lot Size போன்ற முக்கிய Product Gaps-ஐ கண்டறிந்து நிரப்பியதே இந்த வெற்றியின் அடிப்படை. முக்கியமாக, வெள்ளிக்கிழமையிலிருந்து வியாழக்கிழமைக்கு Expriy தேதியை மாற்றியமைத்தது சந்தையில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இது Derivatives Strategy-க்கு புத்துயிர் அளித்ததுடன், பல்வேறு Exchanges-களில் Expriy Options-ஐ விரிவுபடுத்தி, வர்த்தகத்தை அதிகரித்தது.
முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகரிக்கும் வர்த்தகம்
Sensex Derivatives-ல் ஏற்பட்டுள்ள வளர்ச்சி அனைத்து தரப்பு முதலீட்டாளர்களையும் உள்ளடக்கியதாக உள்ளது. தற்போது, மொத்த வர்த்தகத்தில் சுமார் 30% தனிநபர் முதலீட்டாளர்கள் மூலம் நடைபெறுகிறது. நிறுவன முதலீட்டாளர்களின் பங்கேற்பும் படிப்படியாக அதிகரித்து, Liquidity-க்கு வலு சேர்த்துள்ளது. ஒரு வருடம் முன்பு சுமார் 100 ஆக இருந்த Foreign Portfolio Investors (FPIs) எண்ணிக்கை, தற்போது 500-க்கும் மேல் உயர்ந்துள்ளது. High-Frequency Traders-ம் இதில் அதிக ஈடுபாடு காட்டி வருகின்றனர்.
விரைவில் புதிய தயாரிப்புகள்
ஒழுங்குமுறை அமைப்புகளின் ஒப்புதலுக்கு உட்பட்டு, BSE மூன்று புதிய மாதாந்திர Index Derivatives-ஐ அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது: BSE Focused IT, Focused MidCap, மற்றும் Sensex Next 30. சமீபத்தில் தொடங்கப்பட்ட BSE Focused IT index, சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இது, வளர்ந்து வரும் பொருளாதாரத் துறைகளில் வாய்ப்புகளை கண்டறியும் BSE-யின் நோக்கத்தை காட்டுகிறது.
முதலீட்டாளர் பாதுகாப்பும் சந்தை வளர்ச்சியும்
முதலீட்டாளர் பாதுகாப்பு மற்றும் சந்தை வளர்ச்சி இரண்டும் ஒன்றோடொன்று இணைந்து செல்ல வேண்டும் என்பதை BSE வலியுறுத்துகிறது. ஒரு சந்தை ஆபரேட்டராக, திறமையான வர்த்தகத்தை வழங்குவதோடு, பொறுப்பான மற்றும் தகவலறிந்த முதலீட்டையும் ஆதரிப்பதை Exchange நோக்கமாகக் கொண்டுள்ளது. நீண்டகால சந்தை வளர்ச்சிக்கு, முதலீட்டாளர்கள் தயாரிப்புகளை நன்கு புரிந்துகொண்டு புத்திசாலித்தனமாக பங்கேற்பது அவசியம் என நம்புகிறது.
நீண்ட கால வளர்ச்சி வியூகம்
வாராந்திர Expiries கணிசமான செயல்பாட்டைத் தூண்டினாலும், BSE நீண்ட கால நிலைத்தன்மைக்காக புதிய மாதாந்திர தயாரிப்புகள் மற்றும் தற்போதைய மாதாந்திர ஒப்பந்தங்களில் ஆழமான Liquidity-க்கு முன்னுரிமை அளிக்கிறது. Expriy நாளுக்கு அப்பால் Liquidity மேம்படுவதற்கான அறிகுறிகள் ஏற்கனவே காணப்படுகின்றன. இந்தியாவின் Capital Markets, அதன் பொருளாதாரத்தின் அளவோடு ஒப்பிடும்போது இன்னும் வளர்ச்சியடையாத நிலையிலேயே உள்ளது. Derivatives வணிகத்தில் நிலையான வளர்ச்சிக்கு கணிசமான திறனை Exchange காண்கிறது.