அமெரிக்காவில் Waaree Energies-ன் அடுத்த கட்டம்!
Waaree Energies-ன் முழுமையான துணை நிறுவனமான Waaree Solar Americas Inc., யூ.எஸ். சோலார் சந்தையில் தனது இருப்பை வலுப்படுத்தும் விதமாக, United Solar Holdings Inc. நிறுவனத்தில் சுமார் $30 மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த முதலீடு, Series B பங்குகள் மூலமாக நடைபெறுகிறது.
மேலும், கம்பெனி சமீபத்தில் உள்நாட்டு சந்தையில் ஒரு பெரிய ஆர்டரையும் பெற்றுள்ளது. அதன்படி, வரும் நிதியாண்டில் (FY27) சோலார் மாட்யூல்கள் வழங்குவதற்காக 500 MW ஆர்டரை உறுதி செய்துள்ளது.
Q3 நிதிநிலை அறிக்கையின் பலம்!
கம்பெனியின் சமீபத்திய காலாண்டு (Q3) நிதிநிலை முடிவுகளும் அபாரமாக வந்துள்ளன. வருவாய் (Revenue) முந்தைய காலாண்டிலிருந்து 24.7% அதிகரித்து, ₹7,656 கோடி எட்டியுள்ளது. இதன் விளைவாக, நிகர லாபம் (Net Profit) 26% உயர்ந்து ₹1,062 கோடி ஆக பதிவாகியுள்ளது.
வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடன்தொகைக்கு முந்தைய வருவாய் (EBITDA) முந்தைய காலாண்டிலிருந்து 37.2% அதிகரித்து ₹1,928 கோடி எட்டியுள்ளது. மேலும், EBITDA மார்ஜின் 23.2% என்பதிலிருந்து 25.5% ஆக முன்னேறியுள்ளது. இது Waaree Energies-ன் செயல்பாட்டு திறனை சிறப்பாக வெளிப்படுத்துகிறது.
இந்த நேர்மறையான செய்திகள் மற்றும் நிதிநிலை அறிக்கையை அடுத்து, Waaree Energies Ltd பங்குகள் நேற்றைய வர்த்தகத்தில் 2.27% உயர்ந்து, தேசிய பங்குச் சந்தையில் (NSE) ₹2,658.10 என்ற விலையில் நிறைவடைந்தன.