பெரிய ஒப்பந்தம் என்ன?
WeWork India புனேவின் வகாட் பகுதியில் உள்ள Phoenix Millennium Tower 3-ல் மொத்தம் 204,000 ஸ்கொயர் ஃபீட் ஆபீஸ் ஸ்பேஸை நீண்ட கால லீஸுக்கு எடுத்திருக்கிறது. இந்த ஒப்பந்தம் 5 ஃப்ளோர்களை உள்ளடக்கியது. இதில், 13வது முதல் 15வது ஃப்ளோர்கள் வரையிலான 3 ஃப்ளோர்களுக்கு 10 வருடங்களும், 16வது மற்றும் 17வது ஃப்ளோர்களுக்கான 2 ஃப்ளோர்களுக்கு 5 வருடங்களும் இந்த லீஸ் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
மாத வாடகை எவ்வளவு?
இந்த பிரம்மாண்டமான ஆபீஸ் ஸ்பேஸுக்கான மாத வாடகை ஒரு சதுர அடிக்கு ₹73 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், மாத வாடகையாக மட்டும் ₹1.49 கோடிக்கு மேல் செலுத்தப்பட உள்ளது. மேலும், லீஸ் ஒப்பந்தத்தில் ஒரு சிறப்பு க்ளாஸ் சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது, முதல் 3 வருடங்களுக்குப் பிறகு வாடகை 12% உயர்த்தப்படும். அதன் பிறகு ஒவ்வொரு 3 வருடங்களுக்கும் 13.5% வாடகை அதிகரிக்கும். இதற்காக WeWork India ₹4.47 கோடி செக்யூரிட்டி டெபாசிட் தொகையையும் செலுத்தியுள்ளது. இந்த ஆபீஸ் ஸ்பேஸ் அடுத்த ஆண்டு நவம்பர் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்கால திட்டம் என்ன?
WeWork India, இந்த ஒப்பந்தத்தின் கீழ் உள்ள 13வது, 14வது மற்றும் 15வது ஃப்ளோர்களின் சில பகுதிகளை மூன்று வெவ்வேறு டெனன்ட்ஸ்களுக்கு சப்-லீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த சப்-லீஸ் ஒப்பந்தங்கள் 2026 ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கும். இதன் மூலம், ஒரு சதுர அடிக்கு மாத வாடகையாக ₹255 வரை வருவாய் ஈட்ட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது WeWork India செலுத்தும் மாஸ்டர் லீஸ் தொகையை விட கணிசமாக அதிகம்.
சந்தை நிலவரம் எப்படி?
இந்த லீஸ் ஒப்பந்தம், புனேவின் ஆபீஸ் மார்க்கெட்டில், குறிப்பாக வகாட் போன்ற புதிய பகுதிகளில் நிலவும் தொடர்ச்சியான வணிக நடவடிக்கைகளைக் காட்டுகிறது. மும்பை-புனே எக்ஸ்பிரஸ்வே மற்றும் ஹின்ஜேவாடி ஐடி ஹப் அருகில் இதன் அமைவிடம், ஃப்ளெக்ஸிபிள் வொர்க்ஸ்பேஸ் வழங்குநர்களையும், டெக் கம்பெனிகளையும் ஈர்க்கிறது. பல நிறுவனங்கள் பரவலாக்கப்பட்ட வேலை மாதிரிக்கு (Distributed workforce models) மாறுவதாலும், பல்வேறு நகரங்களில் விரிவடைவதாலும், மேனேஜ்டு வொர்க்ஸ்பேஸ் தீர்வுகளுக்கான தேவை அதிகரித்து வருவதை WeWork India-வின் இந்த விரிவாக்கம் காட்டுகிறது.
