குழப்பத்திற்கு என்ன காரணம்?
குர்கிராமில், 'ஸ்டில்ட்-பிளஸ்-ஃபோர்' (stilt-plus-four) என்றழைக்கப்படும், அதாவது ஸ்டில்ட் பார்க்கிங் லெவலுக்கு மேல் நான்கு குடியிருப்பு தளங்கள் கட்ட அனுமதிக்கும் கட்டுமான விதிமுறைதான் இந்த சர்ச்சைக்கு முக்கிய காரணம். ஏற்கெனவே, உள்கட்டமைப்பு வசதிகள் (infrastructure) தாங்காது என்ற காரணத்தால், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் இந்த விதிமுறைக்கு தடை விதித்திருந்தது.
உச்ச நீதிமன்றத்தின் தலையீடு
இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் தடையை மீறி பல கட்டிடங்கள் இடிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், உரிய அறிவிப்பு இன்றி, சட்டப்படி கட்டப்பட்ட கட்டிடங்கள் கூட சேதப்படுத்தப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டார். இதனால், குர்கிராமின் திட்டமிட்ட வளர்ச்சியை கையாளும் ஹரியானா நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (HSVP) குழப்பமான சூழலை சந்தித்து வருகிறது. இந்த நிலையற்ற விதிமுறைகள், கட்டுமான நிறுவனங்களின் (Developers) திட்டமிடல், கட்டுமானம் மற்றும் முதலீட்டாளர்களின் (Investors) நம்பிக்கையை கடுமையாக பாதித்துள்ளன.
ரியல் எஸ்டேட் துறையில் பாதிப்பு
குர்கிராம் ரியல் எஸ்டேட் சந்தை வேகமாக வளர்ந்து வரும் ஒரு பகுதியாகும். வீட்டுவசதியை அதிகரிக்கவும், நிலத்தை திறம்பட பயன்படுத்தவும் 'ஸ்டில்ட்-பிளஸ்-ஃபோர்' விதிமுறை கொண்டுவரப்பட்டது. ஆனால், உள்கட்டமைப்பு வரம்புகளுடன் இது முரண்பட்டுள்ளது. இது பெங்களூரு போன்ற நிலையான விதிமுறைகளைக் கொண்ட சந்தைகளில் இருந்து வேறுபடுகிறது. இந்த தொடர் கொள்கை மாற்றங்கள், திட்ட தாமதங்கள், செலவு அதிகரிப்பு மற்றும் லாபக் குறைப்பு போன்ற சிக்கல்களை டெவலப்பர்களுக்கு ஏற்படுத்துகின்றன. மேலும், நீடித்த வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு மேம்பாடுகளுடன் கூடிய நிலையான விதிமுறைகள் அவசியம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது குர்கிராம் ரியல் எஸ்டேட் சந்தையின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
