மும்பையின் முக்கியப் பகுதியான பந்த்ரா கிழக்கில், வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் ஹைவேக்கு அருகே அமைந்துள்ள 11 ஏக்கர் நிலத்தை ₹5,400 கோடிக்கு Oberoi Realty வாங்கியுள்ளது. ரயில்வே நில மேம்பாட்டு ஆணையத்திடம் (RLDA) இருந்து 99 வருட குத்தகைக்கு பெறப்பட்டுள்ள இந்த நிலம், எதிர்கால திட்டங்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பை வழங்குகிறது. இதன் மூலம், சுமார் 19.50 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டிடங்கள் கட்டும் FSI (Floor Space Index) கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம், மும்பையின் முக்கிய நகர்ப்புறப் பகுதியில் Oberoi Realty-யின் இருப்பை மேலும் வலுப்படுத்துவதோடு, அப்பகுதியின் வளர்ச்சி மீதான நிறுவனத்தின் நம்பிக்கையையும் காட்டுகிறது. இந்த நிலத்தை RLDA அதிகாரப்பூர்வமாக முறைப்படுத்தும் வரை சில நடைமுறைகள் நிலுவையில் உள்ளன.
வலுவான நிதிநிலைமை இந்த பிரம்மாண்ட டீலுக்கு காரணம்
இந்த பெரிய முதலீட்டிற்கு Oberoi Realty-யின் வலுவான நிதிநிலையே முக்கிய காரணமாகும். 2026 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டு மற்றும் முதல் ஒன்பது மாதங்களுக்கான நிதிநிலை அறிக்கைகள் இதை உறுதிப்படுத்துகின்றன. மூன்றாம் காலாண்டில் மட்டும், கம்பெனியின் வருவாய் ₹1,561.74 கோடி ஆக உயர்ந்தது. முதல் ஒன்பது மாதங்களில் மொத்த வருவாய் ₹4,480.56 கோடியை எட்டியுள்ளது. லாபம் (Profit After Tax) ஒன்பது மாதங்களில் ₹1,802.96 கோடியாகவும், EBITDA ₹2,619.22 கோடியாகவும் பதிவாகியுள்ளது. உயர்தர குடியிருப்புப் பிரிவில் (Luxury Residential Sales) வலுவான விற்பனை, வணிக மற்றும் சில்லறை விற்பனைப் பிரிவில் (Commercial and Retail Assets) தொடர்ச்சியான வருவாய், மற்றும் ஷாப்பிங் மால்களுக்கு வாடிக்கையாளர் வருகை அதிகரிப்பு (Strong Footfalls) ஆகியவை இந்த நிதி ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்களிப்பைச் செய்துள்ளன. மேலும், Sky City Mall-க்கு 'Global Retail Project of the Year' விருது கிடைத்ததும், கம்பெனியின் செயல்பாட்டுத் திறனையும், அதன் பல்வேறு ரியல் எஸ்டேட் திட்டங்களில் நிலையான வளர்ச்சியையும் காட்டுகிறது.
