Jefferies-ன் இந்த புல்லிஷ் பார்வைக்கு முக்கிய காரணம், Lodha-வின் பலாவா (Palava) டவுன்ஷிப்பில் உள்ள Data Centre திட்டம். சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் 3 ஜிகாவாட் (GW) Data Centre திறனை உருவாக்கும் நோக்கில் இந்த திட்டம் உள்ளதாக ப்ரோக்கரேஜ் தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் உள்ள நிலப்பரப்பில் ஒரு பகுதி ஏற்கெனவே பெரிய சர்வதேச நிறுவனங்களுக்கு விற்கப்பட்டு, அதற்கான கட்டுமானப் பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன. இது திட்டத்தின் வேகம் குறித்த ஆரம்பகட்ட நம்பிக்கையை அளிக்கிறது.
பலாவாவின் கேந்திரமான அமைவிடம், Data Centre செயல்பாடுகளுக்கு மிக முக்கியமாக தேவைப்படும் மும்பையின் பரந்த ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க்கிற்கு அருகாமை, நம்பகமான மின்சாரம் மற்றும் நீர் ஆதாரங்கள் போன்ற அனுகூலங்களை வழங்குகிறது.
Lodha-வின் முக்கிய வளர்ச்சி உத்திகளான, நிலையான ரெசிடென்ஷியல் விற்பனை மற்றும் வளர்ந்து வரும் Data Centre வியாபாரம், நிலத்தின் மதிப்பை கணிசமாக அதிகரிக்கவும், நீண்ட கால வாடகை வருமானத்தை ஈட்டவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு அளிக்கும் ஆதரவு மற்றும் உலகளாவிய கிளவுட் வழங்குநர்களிடமிருந்து நிலவும் தேவை ஆகியவை இந்த Data Centre திட்டங்களுக்கு மேலும் உத்வேகம் அளிக்கும். குறிப்பாக, FY27 முதல் இந்த Data Centre வியாபாரத்தில் ஒரு பெரிய அளவிலான விரிவாக்கம் நிகழும் என கணிக்கப்பட்டுள்ளது.