இந்தியாவின் டாப் 7 நகரங்களில் உள்ள லக்ஷரி வீடுகளின் விலைகள் கடந்த மூன்று ஆண்டுகளில் சராசரியாக 40% உயர்ந்துள்ளன. ANAROCK குழுமத்தின் அறிக்கையின்படி, டெல்லி-NCR 70% என்ற வியக்கத்தக்க வளர்ச்சியுடன் இந்த ஏற்றத்தில் முன்னணியில் உள்ளது. அறிக்கையின்படி, லக்ஷரி வீடுகளின் சராசரி விலை தற்போது ஒரு சதுர அடிக்கு ரூ. 20,300 ஆக உள்ளது, இது 2022 இல் ரூ. 14,530 ஆக இருந்தது. அதே சமயம், குறைந்த விலை வீடுகள் 26% என்ற மிதமான வளர்ச்சியைப் பெற்றுள்ளன. இந்த வளர்ச்சிக்கு அதிக நிகர மதிப்புள்ள தனிநபர்களின் (HNIs) தேவை அதிகரிப்பு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை முக்கிய காரணங்களாகக் கூறப்படுகிறது.