இந்தியாவின் ரீடெய்ல் ரியல் எஸ்டேட் துறை இப்போது பிரம்மாண்டமான, அனுபவத்தை மையமாகக் கொண்ட மால் (Mega Malls) கலாச்சாரத்திற்கு மாறியுள்ளது. 2030-க்குள் சுமார் 40.4 மில்லியன் சதுர அடி புதிய வணிக வளாகங்கள் வரவிருக்கும் நிலையில், முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய மாற்றங்கள் என்ன?
இந்தியாவின் கமர்ஷியல் ரியல் எஸ்டேட் துறையில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சிறிய அளவிலான மால் திட்டங்களுக்குப் பதிலாக, மக்கள் வந்து செல்லும் வகையில் பிரம்மாண்டமான 'Destination Malls' உருவாக்கப்படுகின்றன. 2000-க்கு முன்பு மால் ஒன்றின் சராசரி அளவு 0.25 மில்லியன் சதுர அடியாக இருந்தது, ஆனால் 2026-2030 காலகட்டத்தில் இது 0.59 மில்லியன் சதுர அடியாக உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது Grade A சொத்துக்களை உருவாக்கும் நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கும்.
மால் வாடகை மற்றும் லாபத்தில் ஏற்றத்தாழ்வு
நாடு முழுவதும் மால் வாடகை ஒரே சீராக இல்லை. மும்பை மற்றும் பெங்களூரு நகரங்களில் கடந்த 3 ஆண்டுகளில் மால் வாடகைகள் 22% உயர்ந்துள்ளன. இது தேசிய சராசரியான 11%-ஐ விட அதிகம். ஆனால், இந்த வளர்ச்சி எல்லா இடங்களிலும் இல்லை. உதாரணமாக, தானே பகுதியில் வேகன்சி ரேட் (Vacancy Rate) வெறும் 1.0% ஆக மட்டுமே உள்ளது, அதேசமயம் குருகிராமில் இது 13.6% வரை உள்ளது. இதனால், வெறும் இடத்தைக் கட்டுவது மட்டும் லாபத்தைத் தராது; சரியான இடமும், தரமுமே முக்கியம்.
ஆபீஸ்-லிங்க்டு ரீடெய்ல் (Office-Linked Retail)
தற்போது கார்ப்பரேட் அலுவலகங்களுக்கு அருகிலேயே ஷாப்பிங் மால் அமைக்கும் முறை பிரபலமாகி வருகிறது. ஏற்கனவே 51.7 மில்லியன் சதுர அடி பரப்பளவில் இந்த வசதிகள் உள்ளன. குருகிராம், மும்பை, புனே போன்ற நகரங்கள் இதில் முன்னணியில் உள்ளன. இருப்பினும், 40.4 மில்லியன் சதுர அடி புதிய இடம் சந்தைக்கு வரும்போது, தேவை குறைவாக இருந்தால் அது ஓவர்-சப்ளை (Oversupply) ஆபத்தை உருவாக்கி, டெவலப்பர்களின் லாபத்தை பாதிக்கலாம்.
முதலீட்டாளர்களுக்கான முக்கிய குறிப்பு
REITs மற்றும் ரியல் எஸ்டேட் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், அந்தந்த நிறுவனங்களின் 'ஆக்குபன்சி லெவல்' (Occupancy Level) மற்றும் கடனைக் கையாளும் திறனை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். சிறிய மால் மற்றும் மெகா மால் இடையிலான வருவாய் இடைவெளி வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் என்பதால், சொத்துக்களின் தரத்தைப் பொறுத்தே முதலீட்டின் லாபம் அமையும்.
