RERA Act, 2016-ன் கீழ், பில்டர்கள் சொன்னபடி வசதிகளை (Amenities) வழங்கவில்லை என்றால், சட்டப்படி அவர்களை கேள்வி கேட்க homebuyers-க்கு முழு உரிமை உண்டு. விற்பனை ஒப்பந்தத்தின் அடிப்படையில் மாநில RERA மற்றும் நுகர்வோர் நீதிமன்றங்களை அணுகி நீதியை நிலைநாட்டலாம்.
ஜிம், நீச்சல் குளம் அல்லது பூங்கா போன்ற வசதிகளை தருவதாகச் சொல்லி, வீட்டை ஒப்படைக்கும் போது அவற்றை வழங்கத் தவறினால் அது ஒப்பந்த மீறல் (Contractual breach) ஆகும். RERA Act, 2016 சட்டத்தின்படி, பில்டர்கள் திட்ட அனுமதி பெற்ற வரைபடங்கள் (Sanctioned plans) மற்றும் ஒப்பந்தத்தில் சொன்னபடி மட்டுமே செயல்பட வேண்டும்.
விற்பனை ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் (Agreement for Sale)
விளம்பரங்கள் மற்றும் துண்டு பிரசுரங்களை விட, நீங்கள் கையெழுத்திட்ட Registered Agreement for Sale ஆவணமே நீதிமன்றத்தில் முக்கிய ஆதாரமாக பார்க்கப்படும். எனவே, அந்த ஒப்பந்தத்தில் அல்லது முனிசிபல் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்ட பிளானில் வசதிகள் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை முதலில் உறுதி செய்யுங்கள். மாநில RERA இணையதளத்தில் இதற்கான பிளான்களை நீங்கள் சரிபார்க்கலாம்.
அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
பில்டருடன் பேசும் சாதாரண பேச்சுவார்த்தைகள் பெரும்பாலும் பலனளிக்காது. எனவே, முறையாக ஒரு Formal notice அனுப்ப வேண்டும். இதற்குப் பிறகு அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மாநில RERA ஆணையத்திடமோ அல்லது நுகர்வோர் நீதிமன்றத்திலோ (Consumer forum) புகார் அளிக்கலாம்.
கூட்டாகப் போராடுதல்
தனிநபராகப் போராடுவதை விட, குடியிருப்போர் நலச் சங்கம் (RWA) மூலமாகப் போராடுவது அதிக பலன் தரும். புகார் அளிக்கும்போது, முழுமையடையாத இடங்களின் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பில்டரின் விளம்பர நகல்களை ஆதாரமாக சமர்ப்பிக்க வேண்டும். சட்டப் போராட்டம் நீண்ட காலம் எடுக்கலாம் என்பதால், ஒப்பந்தத்தில் உள்ள காலக்கெடு மற்றும் நிபந்தனைகளை ஒரு சொத்துரிமை வழக்கறிஞரிடம் (Property lawyer) காட்டி ஆலோசனை பெறுவது அவசியம்.
