முன்பு, தனிப்பட்ட முறையில் சொத்து வாங்கி இரண்டு வருட ரெசிடென்ட் விசா பெற AED 750,000 (சுமார் ₹1.9 கோடி) முதலீடு செய்ய வேண்டியிருந்தது. இந்தத் தகுதி வரம்பு இப்போது முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.
கூட்டு சொத்துரிமை (Joint Property Ownership) விஷயத்தில், ஒவ்வொரு முதலீட்டாளரும் குறைந்தபட்சம் AED 400,000 (சுமார் ₹1.03 கோடி) முதலீடு செய்ய வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றம், நடுத்தர சந்தையில் (Mid-market segment) உள்ள சர்வதேச முதலீட்டாளர்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனி நபர் வரம்பு நீக்கப்பட்டது, அதிகமான தனிப்பட்ட வாங்குபவர்களை ஈர்க்கும் என்றும், கூட்டு உரிமையாளர் விதி, விசா முறையை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Dubai-யின் ரியல் எஸ்டேட் சந்தையை (Real Estate Market) மீண்டும் புத்துயிர் பெறச் செய்வதையும், விற்பனை அளவை (Transaction Volumes) அதிகரிப்பதையும், புதிய முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது இந்த நடவடிக்கை. இது துபாயின் ஒட்டுமொத்த பொருளாதார மீட்சிக்கு (Economic Recovery) ஒரு முக்கிய உந்துதலாக அமையும்.
