Tata Sons தனது துணை நிறுவனங்களான Tata Electronics Systems Solutions மற்றும் Tata Consulting Engineers ஆகியவற்றை தன்னுடன் இணைக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் RBI விதிகளின்படி கட்டாயமாக்கப்படும் IPO-வை தவிர்க்க அந்த நிறுவனம் முயல்கிறது.
பெரும் மாற்றம் ஏன்?
தற்போது Tata Sons ஒரு 'Core Investment Company' (CIC) ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் (RBI) புதிய விதிகளின்படி, குறிப்பிட்ட அளவுக்கு மேல் சொத்துக்களைக் கொண்டுள்ள நிறுவனங்கள் பங்குச் சந்தையில் கட்டாயம் லிஸ்ட் ஆக வேண்டும். இந்த சிக்கலில் இருந்து தப்பிக்கவே, இரண்டு பெரிய துணை நிறுவனங்களை தன்னுடன் இணைத்து, தனது பிசினஸ் மாடலை ஒரு 'Operating Entity'-ஆக மாற்ற Tata Sons முடிவெடுத்துள்ளது.
கணக்கு என்ன?
ஒரு நிறுவனம் CIC என்று அழைக்கப்பட வேண்டுமானால், அதன் 90% சொத்துக்கள் குரூப் கம்பெனிகளில் முதலீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்த மெர்ஜர் மூலம், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் (Operating Revenue) ₹1,05,043 கோடி ஆகவும், நிதி சார்ந்த வருமானம் ₹40,072 கோடி ஆகவும் உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குரூப் நிறுவனங்களிலான முதலீடு 88.5% ஆக குறையும். இதன் மூலம் 90% என்ற அந்த இக்கட்டான வரம்பிற்கு கீழே வந்துவிடலாம் என்பது டாடா குழுமத்தின் கணக்கு.
முதலீட்டாளர்களுக்கு என்ன செய்தி?
பல ஆண்டுகளாக Tata Sons எப்போது ஐபிஓ (IPO) வரும் என்று முதலீட்டாளர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், இந்த மறுசீரமைப்பு நடவடிக்கை, நிறுவனம் தனது பிரைவேட் அந்தஸ்தைத் தக்கவைத்துக் கொள்ளவே விரும்புகிறது என்பதை தெளிவாகக் காட்டுகிறது. TCS மற்றும் Tata Motors போன்ற நிறுவனங்களுக்குத் தாய் நிறுவனமாக இருக்கும் Tata Sons, மீண்டும் தனது பழைய 'Operating Hub' முறைக்குத் திரும்புவது, நீண்டகால வளர்ச்சிக்கும் தொண்டு நிறுவனங்களுக்கு நிதி அளிப்பதற்கும் உதவும் என்று கருதுகிறது.
இருப்பினும், இந்த இணைப்பு RBI-ன் அனுமதியின்றி நடக்காது. இந்த மாற்றத்தை ஏற்றுக்கொண்டு, என்.பி.எஃப்.சி (NBFC) பதிவை ரத்து செய்ய அனுமதிக்குமா என்பதுதான் இப்போதைய மிகப்பெரிய கேள்வி.
