Income Tax Department இனி கட்டாயமான Section 143(2) நோட்டீஸ் வழங்காமல் மறுஆய்வு (Reassessment) செய்ய முடியாது என Supreme Court அதிரடி தீர்ப்பளித்துள்ளது. வரி செலுத்துபவர்கள் விசாரணைக்கு ஒத்துழைத்தாலும், இந்த நோட்டீஸ் இல்லையென்றால் அந்த முழு நடைமுறையும் செல்லாது என்பது உறுதியாகியுள்ளது.
வருமான வரித் துறையின் அதிகாரத்திற்கு உச்ச நீதிமன்றம் பெரிய செக் வைத்துள்ளது. நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் சஞ்சீவ் சச்தேவா அடங்கிய அமர்வு, Income Tax Act-ன் கீழ் Section 143(2) நோட்டீஸ் அனுப்புவது என்பது பேச்சுவார்த்தைக்கே இடமில்லாத கட்டாய நடைமுறை என தீர்ப்பளித்துள்ளது. இந்த நோட்டீஸ் வழங்கப்படாவிட்டால், அந்த மறுஆய்வு நடவடிக்கையே சட்டப்படி செல்லாது.
சட்டப்பூர்வமான கட்டாயம் (The Legal Requirement)
வருமான வரித் துறையினர், வரி செலுத்துபவர்கள் பிற தகவல்தொடர்புகளுக்கு (உதாரணத்திற்கு Section 142(1)) பதில் அளித்தாலே போதுமானது என்று வாதிட்டு வந்தனர். ஆனால், நீதிமன்றம் இதை நிராகரித்துள்ளது. இந்த நோட்டீஸ் என்பது ஒரு அதிகாரப்பூர்வமான முன்நிபந்தனை (Jurisdictional requirement). இது இல்லை என்றால், வரித்துறைக்கு விசாரணை நடத்தவே அதிகாரமில்லை என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
Section 292BB குறித்த விளக்கம்
இதுவரை வரித்துறை Section 292BB பிரிவைப் பயன்படுத்தி, வரி செலுத்துபவர்கள் விசாரணையில் பங்கேற்றால் அவர்கள் தவறை ஒப்புக்கொண்டதாகக் கருதி நோட்டீஸ் பிரச்சனையை மறைத்து வந்தனர். ஆனால், நோட்டீஸ் முறையாக வழங்கப்படவே இல்லை என்றால் இந்த பிரிவு பொருந்தாது என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. நோட்டீஸ் அனுப்பப்பட்டதில் ஏற்படும் தாமதத்திற்கு மட்டுமே இது பொருந்தும், அனுப்பப்படாமலேயே விடுவதற்கு அல்ல.
வரி செலுத்துவோருக்கான பலன்
பல ஆண்டுகளாக வரி தொடர்பான சட்டப் போராட்டங்களில் சிக்கியுள்ளவர்களுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு பெரிய விடிவு காலமாகும். இனி வரித் துறை தங்கள் நடைமுறைகளைச் சரியாகப் பின்பற்றினால் மட்டுமே விசாரணையைத் தொடர முடியும். நீங்கள் ஏற்கனவே மறுஆய்வு தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்கிறீர்கள் என்றால், உங்கள் கோப்புகளைச் சரிபார்த்து, Section 143(2) நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துவது உங்கள் சட்டப்பூர்வமான தற்காப்புக்கு உதவும்.
