ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவதைத் தடுக்க, Reserve Bank of India (RBI) அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அக்டோபர் 12 முதல் எண்ணெய் நிறுவனங்களுக்கு நேரடி டாலர் வசதியை வழங்கி, சந்தையில் ஊக வணிகத்தை (Speculation) கட்டுப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.
ரூபாய் மதிப்பு 96.7 முதல் 97 என்ற அளவில் கடும் அழுத்தத்தில் உள்ள நிலையில், அதை நிலைப்படுத்த RBI களத்தில் இறங்கியுள்ளது. அக்டோபர் 12, 2026 முதல் அமலுக்கு வரும் இந்த புதிய விதிமுறைகள் சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எண்ணெய் நிறுவனங்களுக்கு நேரடி டாலர் சலுகை
Indian Oil Corporation (IOC), Hindustan Petroleum Corporation (HPCL) மற்றும் Bharat Petroleum Corporation (BPCL) ஆகிய அரசு நிறுவனங்கள் இனி தங்களுக்குத் தேவையான டாலர்களை நேரடியாக RBI-யிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம். இதுவரை இந்த நிறுவனங்கள் வெளிச்சந்தையில் டாலர்களை வாங்கியதால் ரூபாய் மதிப்புக்கு அழுத்தம் ஏற்பட்டது. அந்த பெரும் தேவையை சந்தையில் இருந்து விலக்குவதன் மூலம் ரூபாயின் சரிவை தடுக்க RBI திட்டமிட்டுள்ளது.
ஊக வணிகத்திற்கு முற்றுப்புள்ளி
- எட்ஜிங் வரம்பு: ஆதாரம் காட்டாமல் செய்யும் ஹெட்ஜிங் வரம்பை $100 மில்லியன் என்பதில் இருந்து வெறும் $5 மில்லியன் ஆக RBI குறைத்துள்ளது.
- ரத்து செய்யப்பட்ட கான்ட்ராக்டுகள்: ரத்து செய்யப்பட்ட ஃபார்வர்ட் கான்ட்ராக்டுகளை மீண்டும் பதிவு செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- ரொக்க இருப்பு: $2 மில்லியன்-க்கு மேலான சில ரூபாய் சார்ந்த டெரிவேட்டிவ் கான்ட்ராக்டுகளுக்கு வங்கிகள் 20% ரொக்க இருப்பை (Cash Reserve) கட்டாயம் பராமரிக்க வேண்டும்.
தொழில் நிறுவனங்கள் கவனத்திற்கு
இந்த நடவடிக்கைகளால் எண்ணெய் நிறுவனங்களுக்கு டாலர் கிடைப்பது எளிதானாலும், ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கெமிக்கல் போன்ற துறைகளில் இறக்குமதி செய்யும் பிற நிறுவனங்களுக்கு சிக்கல் அதிகரிக்கலாம். புதிய விதிமுறைகளால் பணப்புழக்கம் (Liquidity) குறைய வாய்ப்புள்ளது. இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு (Forex Reserves) அக்டோபர் தொடக்கத்தில் $734 பில்லியன் ஆக இருந்த நிலையில், இந்த நடவடிக்கைகளின் தாக்கம் இனி வரும் வாரங்களில் சந்தையில் எதிரொலிக்கும்.
