Foreign Exchange Management Regulations 2026-ன் கீழ் தனிநபர்களுக்கு புதிய ரிப்போர்ட்டிங் விதிமுறைகளில் இருந்து RBI விலக்கு அளித்துள்ளது. இனி இந்த பொறுப்பு வங்கிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, சிறு வணிகங்களுக்கு ₹10 லட்சம் வரை செல்ஃப்-டிக்ளரேஷன் வசதி உண்டு.
என்ன மாற்றம்?
அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வந்த Foreign Exchange Management (Export and Import of Goods and Services) Regulations, 2026 தொடர்பான குழப்பங்களுக்கு RBI முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தனிப்பட்ட ரீதியிலான அந்நிய செலாவணி பரிவர்த்தனைகளுக்கு இனி தனிநபர்கள் எந்தவிதமான புதிய ரிப்போர்ட்டிங் விதிமுறைகளையும் பின்பற்றத் தேவையில்லை.
இனி யார் ரிப்போர்ட் செய்வது?
இதுவரை வாடிக்கையாளர்கள் செய்த வந்த ரிப்போர்ட்டிங் வேலைகளை, இனி Authorized Dealer (AD) வங்கிகள் செய்யும். வங்கிகளிடம் உள்ள டிஜிட்டல் தளங்கள் மூலம் இந்தத் தரவுகள் தானாகவே பரிமாறப்படும். இதனால் தனிநபர்கள் காகித வேலைகளுக்காக அலையத் தேவையில்லை.
வணிகர்களுக்கு என்ன பலன்?
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஒரு பெரிய நிம்மதி கிடைத்துள்ளது. ₹10 லட்சம் வரை மதிப்புள்ள பொருட்கள் மற்றும் சேவைகள் சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு, இனி செல்ஃப்-டிக்ளரேஷன் (Self-declaration) முறையை பயன்படுத்திக்கொள்ளலாம். இது நிர்வாக வேலைப்பளுவை பெருமளவு குறைக்கும்.
கவனிக்க வேண்டிய ரிஸ்க்குகள்
- Freelancers & Service Exporters: வணிக ரீதியான வருமானத்தைத் தவறாக 'தனிப்பட்ட பரிவர்த்தனை' என வகைப்படுத்தினால், வருமான வரி மற்றும் ஒழுங்குமுறைச் சிக்கல்கள் வரலாம்.
- உங்கள் வங்கி சரியான தரவுகளை ரிப்போர்ட் செய்கிறதா என்பதை அவ்வப்போது சரிபார்ப்பது அவசியம். இல்லையெனில் உங்கள் வங்கி கணக்குகள் ஆய்வுக்காக முடக்கப்பட வாய்ப்புள்ளது.
Export Declaration Forms (EDF) தொடர்பான புதிய விதிமுறைகளை வணிகர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். விரைவில் RBI இது தொடர்பான விரிவான FAQ-க்களை வெளியிட உள்ளது.
