Assessment Year 2026-27 க்கான டாக்ஸ் ஆடிட் தாக்கல் செய்ய செப்டம்பர் 30-ஆம் தேதி இறுதி நாள் என CBDT உறுதி செய்துள்ளது. எக்ஸ்டென்ஷன் கிடையாது என்பதால், அபராதத்தைத் தவிர்க்க பிசினஸ் உரிமையாளர்கள் உடனே செயல்பட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வருமான வரித்துறை (CBDT), நடப்பு Assessment Year 2026-27-க்கான டாக்ஸ் ஆடிட் தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கப் போவதில்லை என்பதைத் தெளிவாக அறிவித்துள்ளது. அக்டோபர் 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்படும் என பல தொழில் அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், CBDT எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, பிசினஸ் நிறுவனங்கள் மற்றும் ஆடிட்டர்கள் அனைவரும் செப்டம்பர் 30-க்குள் பணிகளை முடிக்க வேண்டும்.
அபராதம் மற்றும் சட்ட சிக்கல்கள்
நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் ஆடிட் ரிப்போர்ட்டை சமர்ப்பிக்கத் தவறினால், Income Tax Act-ன் செக்ஷன் 271B-ன் கீழ் அபராதம் விதிக்கப்படும். இது உங்களின் மொத்த விற்றுமுதல் அல்லது வருவாயில் 0.5% வரை வசூலிக்கப்படலாம். இதன் அதிகபட்ச அபராதத் தொகை ₹1.5 லட்சம் ஆகும். இதுமட்டுமல்லாமல், வருமான வரித்துறையின் கூடுதல் கண்காணிப்புக்கும் நீங்கள் உள்ளாக நேரிடும்.
கவனிக்க வேண்டிய Reconciliation ஸ்டெப்ஸ்
ஆடிட் தாக்கல் செய்யும் முன், உங்கள் நிறுவனத்தின் கணக்கு புத்தகங்களை Form 26AS, AIS (Annual Information Statement) மற்றும் TIS (Taxpayer Information Summary) ஆகியவற்றுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது மிக முக்கியம். தரவுகளில் ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால், வருமான வரித்துறையிடமிருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் வர வாய்ப்புள்ளது.
கவனமாக இருக்க வேண்டியவை
கேஷ் பரிவர்த்தனை வரம்புகள், சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைகள், மற்றும் சட்டப்பூர்வ வரி செலுத்துதல்களில் ஏற்பட்டுள்ள காலதாமதம் ஆகியவற்றைச் சரியாக ஆவணப்படுத்த வேண்டும். நஷ்டங்களை அடுத்த ஆண்டுக்கு கொண்டு செல்வது (Carry-forward of losses) மற்றும் தேய்மானம் தொடர்பான கணக்கீடுகளைத் துல்லியமாகச் சரிபார்க்கவும். அக்டோபர் 31-க்குள் ஐடி ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டியிருப்பதால், கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல் உடனே ஆடிட் பணியை முடிப்பதே புத்திசாலித்தனம்.
