PF பணத்தை எடுப்பதிலும், டிரான்ஸ்பர் செய்வதிலும் சிக்கல் ஏற்படுகிறதா? EPFO போர்ட்டலில் உங்கள் பணி விவரங்களைச் சரியாக அப்டேட் செய்வது அவசியம். ஓய்வூதியத் திட்டத்திற்கு (EPS) இது எப்படி உதவுகிறது என்று பார்ப்போம்.
பல ஊழியர்கள் வேலை மாறும்போது அல்லது ஓய்வுபெறும்போது மட்டுமே தங்கள் EPF கணக்கைப் பார்ப்பார்கள். ஆனால், உங்கள் பணியின் கால அளவு (Service History) குறித்த தரவுகள் தவறாக இருந்தால், உங்கள் பணம் முடக்கப்பட வாய்ப்புள்ளது.
ஏன் இந்த தேதிகள் மிக முக்கியம்?
உங்கள் PF கணக்கில் உள்ள 'Date of Joining' மற்றும் 'Date of Exit' ஆகிய இரண்டும்தான் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் அடிப்படை. இந்தத் தேதிகள் தவறாகவோ அல்லது விடுபட்டோ இருந்தால், உங்கள் பணம் எடுக்க முடியாது, டிரான்ஸ்பர் கோரிக்கைகளும் நிராகரிக்கப்படும்.
ஓய்வூதியத் திட்டத்தில் (EPS) சிக்கல்
ஓய்வூதிய பலன்களைப் பெற ஒருவர் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியில் இருந்திருக்க வேண்டும். உங்கள் கணக்கில் 'Date of Exit' அப்டேட் செய்யப்படாமல் இருந்தால், கணினி உங்கள் பணி காலத்தை குறைவாகவே கணக்கிடும். இதனால் பென்ஷன் பெறும் தகுதியை நீங்கள் இழக்க நேரிடும்.
டிரான்ஸ்பர் மற்றும் கிளைம் வசதிகள்
புதிய கம்பெனிக்கு மாறும்போது பழைய PF பணத்தை எளிதாக மாற்ற, முந்தைய கம்பெனியில் முறையாக 'Date of Exit' பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். மேலும், ₹5 லட்சம் வரையிலான கிளைம்களை விரைவாகப் பெற (Auto-settlement) உங்கள் KYC மற்றும் பணி விவரங்கள் மிகவும் துல்லியமாக இருக்க வேண்டும். பிழைகள் இருந்தால், உங்கள் கோரிக்கை மேனுவல் சரிபார்ப்புக்குச் சென்றுவிடும், இது நீண்ட தாமதத்தை உண்டாக்கும்.
பிழைகளைச் சரிசெய்வது எப்படி?
EPFO மெம்பர் இ-சேவா போர்ட்டலில் லாக்-இன் செய்து 'Service History' பகுதியைச் சரிபார்க்கவும். 'Date of Exit' விடுபட்டிருந்தால், வேலையை விட்டு விலகி 60 நாட்கள் கழித்து நீங்களே ஆதார் OTP மூலம் அதைச் சரிசெய்யலாம். பெரிய சிக்கல்கள் இருந்தால், உங்கள் பழைய கம்பெனியின் HR உதவியுடன் 'Joint Declaration' சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். வேலை மாறும்போது ஒவ்வொரு முறையும் இந்தத் தரவுகளைச் சரிபார்ப்பது உங்கள் ஓய்வுக்கால சேமிப்பைப் பாதுகாக்கும் சிறந்த வழியாகும்.
