பூர்வீக தங்கம் அல்லது Inherited Gold-ஐ விற்கும்போது ஒரிஜினல் ரசீதுகள் இல்லையென்றால் வரி சிக்கல் வரலாம். ஆனால் Fair Market Value மற்றும் சட்டப்பூர்வ ஆவணங்கள் மூலம் இதைச் சரிசெய்து, வரிப் சுமையைக் குறைக்க முடியும்.
பூர்வீக தங்கத்தை விற்கும் போது பலருக்கும் இருக்கும் பெரிய கேள்வி, 'ரசீது இல்லை, இப்போது எப்படி கணக்கு காட்டுவது?' என்பதுதான். ரசீது இல்லையென்றால், வருமான வரித்துறையினர் அந்தத் தொகையை 'Unexplained Cash Credit' எனக் கருதி அதிக வரி விதிக்க வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்க சில முக்கிய வழிகள் உள்ளன.
அக்விசிஷன் காஸ்ட் (Acquisition Cost) கண்டறிதல்
1 ஏப்ரல் 2001-க்கு முன் வாங்கிய தங்கத்திற்கு, அந்த தேதியிலான Fair Market Value (FMV)-ஐ நீங்கள் ஆதாரமாகப் பயன்படுத்தலாம். இதற்கு அங்கீகரிக்கப்பட்ட ஜூவல்லரிடம் சான்றிதழ் பெறுவது அவசியம்.
அதற்குப் பிறகு வாங்கிய தங்கமாக இருந்தால், பழைய வங்கி ஸ்டேட்மென்ட் அல்லது இன்சூரன்ஸ் ஆவணங்களைத் திரட்டவும். இவை எதுவுமே இல்லை என்றால், சட்டப்பூர்வ வாரிசுதாரர்கள் வழங்கும் பிரமாண பத்திரம் (Affidavit) சான்றாகப் பயன்படும்.
வரி விகிதங்கள் (Tax Rates)
Income-tax Act பிரிவு 49-ன் படி, ஒரிஜினல் உரிமையாளர் வாங்கிய தேதியிலிருந்தே ஹோல்டிங் பீரியட் கணக்கிடப்படும். இந்த காலம் 24 மாதங்களுக்கு மேல் இருந்தால், அது Long-term capital asset. இதற்கான வரி 12.5% ஆகும் (இன்டெக்சேஷன் பலன் கிடையாது). காலம் 24 மாதங்களுக்கு குறைவாக இருந்தால், அது Short-term capital gain ஆகக் கருதப்பட்டு, உங்கள் வருமான வரி ஸ்லாப் (Slab rate) படி வரி விதிக்கப்படும்.
வரி சேமிப்பு வாய்ப்பு
Section 54F-ன் கீழ், தங்கத்தை விற்ற தொகையை ஒரு புதிய குடியிருப்பு சொத்தில் முதலீடு செய்வதன் மூலம் வரி விலக்கு பெறலாம். ஆனால், விற்பனை செய்யும் நேரத்தில் உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட வீடு இருக்கக்கூடாது. இந்த நிபந்தனைகளை சரியாகப் பின்பற்றினால், வரிப் சுமையை பெருமளவு குறைக்க முடியும்.
