ஜூலை 1, 2026 முதல் அமலுக்கு வந்துள்ள RBI-இன் புதிய விதிகளின்படி, வாரத்திற்கு ஒருமுறை கிரெடிட் டேட்டா அப்டேட் செய்யப்படும். இதனால் லோன் அப்ளிகேஷன் மற்றும் EMI தாமதங்கள் உங்கள் CIBIL ஸ்கோரை மின்னல் வேகத்தில் பாதிக்கும்.
இந்தியாவின் தனிநபர் நிதிச் சந்தையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது RBI. ஜூலை 1, 2026 முதல், வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs), வாடிக்கையாளர்களின் கடன் விவரங்களை மாதத்திற்கு நான்கு முறை—அதாவது 9, 16, 23 மற்றும் மாதத்தின் கடைசி தேதிகளில்—கிரெடிட் பீரோக்களுக்கு (CIBIL, Experian, Equifax, CRIF High Mark) அனுப்ப வேண்டும்.
புதிய லோன் எடுத்தால் என்ன நடக்கும்?
நீங்கள் புதிய லோனுக்கு விண்ணப்பிக்கும்போது, லெண்டர்கள் செய்யும் 'Hard Enquiry' உங்கள் ஸ்கோரை தற்காலிகமாக 5 முதல் 10 பாயிண்ட் வரை குறைக்கலாம். இது பொதுவான நடைமுறை என்றாலும், இப்போது புதிய லோன் விவரங்கள் வாராவாரம் அப்டேட் செய்யப்படுவதால், உங்கள் ஸ்கோரில் இந்த தாக்கம் மிக விரைவாக எதிரொலிக்கும்.
EMI தாமதத்தின் ஆபத்து
முன்பெல்லாம் தவணை முறையில் தவறு நடந்தால் கிரெடிட் ரிப்போர்ட்டில் தெரிய சில வாரங்கள் ஆகும். ஆனால், தற்போது வாராந்திர ரிப்போர்ட்டிங் இருப்பதால், ஒரே ஒரு நாள் EMI தாமதம் கூட உங்கள் கிரெடிட் ப்ரொஃபைலில் உடனே பதிவாகிவிடும். எனவே, பணத்தை சரியாக திட்டமிட்டு கட்டுவது உங்கள் நிதி ஆரோக்கியத்திற்கு மிக அவசியம்.
ஒரே நேரத்தில் பல லோன் விண்ணப்பங்கள் வேண்டாம்
குறுகிய காலத்தில் பல வங்கிகளில் லோன் கேட்டு விண்ணப்பித்தால், அடுத்தடுத்து 'Hard Enquiry' பதிவாகும். இது உங்களை அதிக கடன் தேவைப்படுபவராகக் காட்டி, உங்கள் ஸ்கோரை வேகமாகச் சரிக்கும். எனவே, தேவைக்கு ஏற்ப கவனமாக லோன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும்.
உங்கள் ஸ்கோரை காப்பது எப்படி?
அடிக்கடி உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டை செக் செய்வது இப்போது மிக முக்கியமான பணியாக மாறியுள்ளது. லோன் அடைக்கப்பட்டால், அந்த விவரம் சீக்கிரம் அப்டேட் செய்யப்படுவதால் உங்கள் கடன் சுமை குறைந்தது விரைவில் பிரதிபலிக்கும். சரியான நேரத்தில் EMI கட்டுவதும், குறைந்த அளவு கிரெடிட் லிமிட்டைப் பயன்படுத்துவதும் உங்கள் ஸ்கோரை எப்போதும் உயரத்தில் வைக்கும்.
