நீங்கள் வெளிநாடு குடிபெயர்ந்தாலும் உங்கள் NPS அக்கவுண்ட்டை மூட வேண்டிய அவசியமில்லை. ஆனால், உங்கள் KYC மற்றும் குடியிருப்பு அந்தஸ்தை (Residential status) மாற்றுவது அவசியம். மேலும், RBI விதிகளின்படி இனி உங்கள் முதலீடுகளை NRE அல்லது NRO வங்கி கணக்குகள் மூலம் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.
நீங்கள் வெளிநாடு செல்லும்போது உங்கள் NPS அக்கவுண்ட்டை மூட வேண்டிய கட்டாயம் இல்லை. இந்திய குடிமக்கள் NRI-களாக மாறினாலும், தாராளமாக தங்கள் Tier-I கணக்குகளை வெளிநாட்டிலிருந்தும் பராமரிக்கலாம். ஆனால், உங்கள் அந்தஸ்து மாறும்போது சில முக்கிய நடைமுறைகளை நீங்கள் தவறாமல் செய்ய வேண்டும்.
வங்கி மற்றும் KYC விதிமுறைகள்
நீங்கள் வெளிநாடு சென்றவுடன் செய்ய வேண்டிய மிக முக்கியமான வேலை, Central Recordkeeping Agency (CRA)-விடம் உங்கள் குடியிருப்பு அந்தஸ்தை அப்டேட் செய்வதுதான். Reserve Bank of India (RBI) மற்றும் Foreign Exchange Management Act (FEMA) விதிகளின்படி, நீங்கள் NRI ஆன பிறகு, உங்கள் சாதாரண ரெசிடென்ட் சேமிப்பு கணக்கிலிருந்து பணத்தை செலுத்தக்கூடாது. அதற்கு பதிலாக, இனி உங்கள் முதலீடுகள் அனைத்தும் NRE அல்லது NRO கணக்குகள் வழியாகவே இருக்க வேண்டும். இவற்றைச் சரியாகச் செய்யாவிட்டால், எதிர்காலத்தில் பணம் எடுக்கும்போது தேவையற்ற சிக்கல்களைச் சந்திக்க நேரிடும்.
மேலும் கவனிக்க வேண்டியது, NRI-களுக்கு Tier-II கணக்குகள் கிடையாது. ஏற்கனவே கார்ப்பரேட் NPS கணக்கு வைத்திருப்பவர்கள், அதை 'All Citizens Model'-க்கு மாற்றிக்கொள்ளலாம்.
சர்வதேச வரி சிக்கல்கள் (Tax Implications)
இந்தியாவில் NPS முதலீடு வரிச் சலுகை கொண்டது, ஆனால் நீங்கள் வசிக்கும் வெளிநாட்டில் வரி விதிகள் வேறுபடலாம். இந்தியாவில் 60% பணத்தை எடுக்கும்போது வரி விலக்கு உண்டு, ஆனால் பல வெளிநாடுகளில் உங்கள் வருடாந்திர முதலீட்டு வளர்ச்சியின் மீது வரி விதிக்கப்படலாம். எனவே, இந்தியா மற்றும் நீங்கள் வசிக்கும் நாட்டிற்கு இடையிலான Double Taxation Avoidance Agreement (DTAA) உடன்படிக்கையை சரிபார்ப்பது நல்லது. ஒரே வருமானத்திற்கு இரண்டு இடங்களில் வரி செலுத்துவதைத் தவிர்க்க ஒரு நல்ல டேக்ஸ் ஆலோசகரை அணுகுவது எப்போதும் சிறந்தது. முக்கியமாக, நீங்கள் இந்தியக் குடியுரிமையை விட்டுவிட்டால், உங்கள் NPS கணக்கு தானாகவே முடிவுக்கு வந்துவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
