பண்டிகைக் காலங்களில் தங்கம் வாங்குவது முதலீட்டாளர்களுக்கு வழக்கமான ஒன்று. ஆனால், 2026-ம் ஆண்டு நடைமுறையில் உள்ள Income-tax Act, 2025-ன் கீழ் தங்கம், ETF மற்றும் Sovereign Gold Bond (SGB) முதலீடுகளுக்கான வரி விதிகள் மற்றும் ஹோல்டிங் பீரியட் (Holding Period) என்ன என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம்.
ஹோல்டிங் பீரியட் மற்றும் வரி விகிதங்கள்
தங்கம் மற்றும் வெள்ளிக்கான வரி விதிப்பு, நீங்கள் முதலீடு செய்துள்ள முறையைப் பொறுத்து மாறுபடும். பிசிக்கல் தங்கம் மற்றும் வெள்ளியைப் பொறுத்தவரை, 24 மாதங்களுக்கு மேல் வைத்திருந்தால் மட்டுமே அது லாங்-டேர்ம் கேபிடல் கெயின்ஸ் (LTCG) வரிக்கு உட்படும். இந்த காலத்திற்கு முன்னதாக விற்றால், அது ஷார்ட்-டேர்ம் கேபிடல் கெயின்ஸ் (STCG) ஆகக் கருதப்பட்டு, உங்கள் வருமான வரி ஸ்லாப் (Slab rate) அடிப்படையில் வரி விதிக்கப்படும்.
Gold மற்றும் Silver ETF-களைப் பொறுத்தவரை, 12 மாதங்களுக்கு மேல் வைத்திருந்தால் அது லாங்-டேர்ம் முதலீடாகக் கருதப்படுகிறது. லாங்-டேர்ம் அடிப்படையில் விற்கப்படும் போது, இதற்கு 12.5% வரி விதிக்கப்படுகிறது. ஆனால், தற்போதைய விதிகளின்படி இதற்கு இன்டெக்சேஷன் (Indexation) பலன் கிடையாது.
Sovereign Gold Bond (SGB) நுணுக்கங்கள்
SGB முதலீட்டில் முதலீட்டாளர்கள் கவனமாக இருக்க வேண்டும். நேரடியாக அரசு வெளியிடும் போது வாங்கி, மெச்சூரிட்டி வரை வைத்திருந்தால் மட்டுமே, அந்தத் தொகைக்கு கேபிடல் கெயின்ஸ் வரி கிடையாது. ஆனால், செகண்டரி மார்க்கெட்டில் (Secondary Market) வாங்கி விற்கப்படும் SGB-களுக்கு, நீண்ட கால முதலீடாக இருந்தால் 12.5% வரி உண்டு. மேலும், SGB மூலம் கிடைக்கும் ஆண்டு வட்டி, உங்கள் வருமானமாகக் கருதப்பட்டு அதற்கு வரி உண்டு.
வரி இணக்கம் மற்றும் ரிப்போர்ட்டிங்
வரி விதிப்பு நடைமுறைகள் அனைத்தும் இப்போது டிஜிட்டல் மயமாகிவிட்டன. உங்களின் அனைத்து பரிவர்த்தனைகளையும் Annual Information Statement (AIS) மற்றும் Form 26AS உடன் ஒப்பிட்டு சரிபார்த்துக்கொள்ளுங்கள். தங்கம் அல்லது வெள்ளி வாரிசு உரிமையாக (Inheritance) கிடைக்கும் பட்சத்தில், முந்தைய உரிமையாளர் வைத்திருந்த காலமும், வாங்கிய விலையும் உங்களுக்கே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
வருமான வரி தாக்கல் செய்யும் போது, Schedule CG-யில் இந்தத் தகவல்களைத் துல்லியமாகப் பதிவு செய்வது மிக முக்கியம். அப்போதுதான் வரித் துறையின் ஸ்க்ரூட்டினியைத் தவிர்க்க முடியும்.
