மாதாந்திர சம்பளம் பெறாத ஃப்ரீலான்ஸர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள், நிலையான முதலீட்டு முறைகளைத் தவிர்த்து, நெகிழ்வான (Flexible) அணுகுமுறையை கடைப்பிடிப்பது அவசியம். பெரிய எமெர்ஜென்சி ஃபண்ட் மற்றும் முறையான சொத்து ஒதுக்கீடு மூலம் உங்கள் நீண்டகால செல்வத்தை எப்படி பாதுகாக்கலாம் என்பதை இங்கே பார்க்கலாம்.
இந்தியாவில் ஃப்ரீலான்ஸர்கள் மற்றும் கன்சல்டன்ட்களுக்கு, மாதந்தோறும் ஒரே தேதியில் சம்பளம் வரும் வழக்கமான நிதித் திட்டமிடல் பொருந்தாது. வருமானம் சீரற்ற முறையில் வருவதால், வழக்கமான SIP-களில் கட்டாய முதலீடு செய்வது சில நேரங்களில் நிதிச் சுமையை ஏற்படுத்தலாம். இதற்கு மாற்றாக, வருமானம் வரும்போது முதலீடு செய்யும் வகையில் ஆண்டு இலக்குகளை (Annual Target) நிர்ணயிப்பது சிறந்த தீர்வாகும்.
எமெர்ஜென்சி ஃபண்டிற்கு முக்கியத்துவம்
சம்பளம் பெறுபவர்களுக்கு 6 மாத கால செலவுக்கான அவசர நிதி (Emergency Fund) போதும் என்பார்கள். ஆனால், சுயதொழில் செய்பவர்கள் 9 முதல் 12 மாதங்கள் வரையிலான செலவுத் தொகையை கையிருப்பில் வைத்திருப்பது கட்டாயம். இது மார்க்கெட் சரிவின் போதும், தொழில் மந்தமான காலத்திலும் உங்கள் நீண்டகால முதலீடுகளைத் தொடாதபடி பாதுகாக்கும்.
உணர்ச்சிவசப்படாத முதலீடு
கையில் பெரிய தொகை ஒரே நேரத்தில் வரும்போது, மார்க்கெட்டில் ஹிட் ஆகும் பங்குகளில் முதலீடு செய்யத் தோன்றும். இது தவறான அணுகுமுறை. இதற்குப் பதிலாக, Equity, Debt மற்றும் Gold ஆகியவற்றில் ஒரு நிலையான விகிதத்தில் (Fixed Split) முதலீடு செய்யும் முறையை கடைப்பிடியுங்கள். சந்தை நிலவரத்தை விட, உங்கள் முதலீட்டு பிளான் முக்கியமானது.
எளிமையான போர்ட்ஃபோலியோ
எப்போதும் போர்ட்ஃபோலியோவை எளிமையாக வைத்திருங்கள். Index Funds, Low-duration debt மற்றும் Gold ETF-களில் முதலீடு செய்வது கவனிப்பை குறைத்து, லாபத்தை கூட்டும். உங்கள் கேஷ்-ஃப்ளோவை கண்காணித்து, முதலில் எமெர்ஜென்சி ஃபண்டையும், பின்னர் சிஸ்டமேட்டிக் முதலீட்டையும் திட்டமிட்டால், நீங்கள் ஒரு நிபுணராக நீண்டகால செல்வத்தை உருவாக்க முடியும்.
