எதிர்பாராத நெருக்கடிகளின் போது குழப்பத்தைத் தவிர்க்க, உங்கள் குடும்பத்தின் நிதி ஆவணங்களை ஒரே இடத்தில் திரட்டி வைப்பது மிக அவசியம். பேங்க் அக்கவுண்ட், இன்வெஸ்ட்மென்ட், இன்சூரன்ஸ் விவரங்களை பாதுகாப்பாக நிர்வகிப்பது எப்படி என்பது குறித்த எளிய வழிகாட்டி.
இந்தியாவில் பலரும் செல்வம் சேர்ப்பதில் காட்டும் ஆர்வத்தை, அதை குடும்பத்தினருக்கு பாதுகாப்பாக கொண்டு சேர்ப்பதில் காட்டுவதில்லை. வங்கி கணக்குகள், டிஜிட்டல் ஆப்ஸ் என பல இடங்களில் சிதறிக்கிடக்கும் உங்கள் முதலீடுகள், ஒரு நெருக்கடியான சூழலில் குடும்பத்தினருக்கு பெரும் சிக்கலை உருவாக்கும். எனவே, அனைத்து நிதி விவரங்களையும் உள்ளடக்கிய ஒரு 'Master File' உருவாக்குவது மிகவும் அவசியம்.
எதை எதை ஆவணப்படுத்த வேண்டும்?
- வங்கி மற்றும் முதலீடுகள்: உங்கள் வங்கி கணக்குகள், டிமேட் அக்கவுண்ட் (Demat Account), மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்கள், மற்றும் EPF, NPS போன்ற ஓய்வூதிய திட்டங்களை பட்டியலிடுங்கள்.
- நாமினேஷன் (Nomination): மிக முக்கியமான விஷயம் இதுதான். ஒவ்வொரு கணக்கிற்கும் நாமினி விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்துங்கள். நாமினி இல்லாத பட்சத்தில், சொத்துக்களை பெறுவதற்கு நீண்ட சட்ட போராட்டங்களை சந்திக்க நேரிடும்.
- கடன் மற்றும் பொறுப்புகள் (Liabilities): ஹோம் லோன், பர்சனல் லோன் மற்றும் வழக்கமான SIP முதலீடுகள் குறித்த தகவல்களைத் தனியாகக் குறித்து வையுங்கள். இது குடும்பத்தினர் அவசர காலத்தில் தேவையற்ற அபராதங்களைத் தவிர்க்க உதவும்.
- இன்சூரன்ஸ்: பாலிசி எண்கள், கவர் தொகை (Coverage amount) மற்றும் பிரீமியம் கட்டும் தேதிகளைத் தெளிவாகக் குறிப்பிடுங்கள்.
பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு
பலரும் 'வில்' (Will) எழுதுவதற்கும், இந்த நிதி ஆவணக் கோப்பை (Money File) பராமரிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்வதில்லை. வில் என்பது சொத்து உரிமையைப் பற்றியது, ஆனால் இந்த நிதி ஆவணக் கோப்பு என்பது தகவல்களை எளிதாக அணுகுவதற்கான ஒரு மேப் போன்றது. பாஸ்வேர்டுகளை காகிதத்தில் எழுதாமல், Digilocker போன்ற பாதுகாப்பான டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்துங்கள்.
கடைசியாக, நீங்கள் தயார் செய்த இந்த விவரங்கள் உங்கள் குடும்பத்தினருக்குத் தெரிந்திருக்க வேண்டும். குறைந்தது வருடத்திற்கு ஒருமுறை இந்த ஆவணங்களைச் சரிபார்த்து (Audit), புதிய முதலீடுகள் அல்லது கடன் விவரங்களை அப்டேட் செய்வது உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய பாதுகாப்பு.
