கொல்கத்தாவின் Camac Street-ல் உள்ள ஒரு கமாஷியல் கட்டடத்தில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதால், உடனே காலி செய்ய West Bengal Fire and Emergency Services அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இங்குதான் TMC தலைவர் Abhishek Banerjee-ன் அலுவலகமும் உள்ளது.
மேற்கு வங்க தீயணைப்பு மற்றும் அவசரக்கால சேவை இயக்குநரகம், செப்டம்பர் 4, 2026 அன்று இந்த முக்கிய உத்தரவை பிறப்பித்தது. Camac Street-ல் உள்ள 9 Abanindranath Tagore Sarani என்ற முகவரியில் அமைந்துள்ள வணிக வளாகத்தின் தரைத்தளம், 6-வது மற்றும் 7-வது தளங்களை உடனடியாக காலி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏன் இந்த அதிரடி நடவடிக்கை?
கட்டடத்தின் தீயணைப்பு பாதுகாப்பு சான்றிதழ் (Fire Safety Certificate) கடந்த ஆகஸ்ட் 10, 2026 அன்றே காலாவதியாகிவிட்டது. தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தும், உரிமையாளர் முறையான புதுப்பித்தல் பணிகளைச் செய்யவில்லை. அதிகாரிகள் நடத்திய சோதனையில், தீயணைப்பு உபகரணங்கள் பழுதடைந்திருப்பது, அவசரக்கால வழிகள் அடைக்கப்பட்டிருப்பது மற்றும் தரைத்தளத்தில் முறையற்ற முறையில் LPG சிலிண்டர்கள் சேமித்து வைக்கப்பட்டது போன்ற பல பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டன.
அடுத்தகட்ட நடவடிக்கைகள்
West Bengal Fire Services Act, 1950-ன் கீழ், பாதுகாப்பு குறைபாடுகள் சரிசெய்யப்பட்டு புதிய சான்றிதழ் பெறும் வரை இந்த தளங்கள் செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 3-ம் தேதி நடந்த ஒரு வன்முறைச் சம்பவத்திற்குப் பிறகு, இப்போது பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. Kolkata Municipal Corporation மற்றும் உள்ளூர் காவல்துறையினருடன் இணைந்து, மின்சார வாரியம் உள்ளிட்ட பிற துறைகளும் இந்த கட்டடத்தை மூட ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன.
