IIT பம்பாயில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் ஜெயின்ந்திரஜீத், 10-ஆம் வகுப்பில் வெறும் 54% மதிப்பெண்கள் பெற்ற நிலையில், JEE மெயின் தேர்வில் 99.98% பெர்சென்டைல் எடுத்து அசத்தியுள்ளார். ஆரம்பகால கல்வித் தடைகளை, முறையான பயிற்சி மற்றும் ஒழுக்கமான படிப்பு மூலம் எப்படி ஜெயிக்கலாம் என்பதற்கு இவரது கதை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
Detailed Coverage
படிப்பில் ஒரு மறுபிறவி!
போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் பல மாணவர்களுக்கு ஜெயின்ந்திரஜீத்தின் கதை ஒரு நம்பிக்கையூட்டும் பாடமாகும். 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 54% மதிப்பெண்கள் பெற்றார். நீண்ட நாள் உடல்நலக் குறைவால் அவரது படிப்பு பாதிக்கப்பட்டது. இருந்தபோதிலும், தனது கல்வி இலக்குகளைக் குறைத்துக்கொள்ளாமல், படிக்கும் முறையையே மாற்றியமைக்க முடிவு செய்தார்.
வியூக மாற்றமும், தினசரி பயிற்சியும்
அடிப்படை அறிவில் இருந்த இடைவெளியை நிரப்ப, ஜெயின்ந்திரஜீத் மிக ஒழுக்கமான படிப்பு முறையைக் கடைபிடித்தார். தினமும் சுமார் 10 மணி நேரம் படிப்பில் கவனம் செலுத்தினார். சமூக வலைதளப் பயன்பாட்டைக் குறைத்து, கவனச்சிதறல்களை தவிர்த்தார். வகுப்பறை பாடங்களுக்கு முன்பே பாடங்களை படித்து முடிக்கும் யுக்தியைக் கையாண்டார். இதனால், வகுப்புக்கு செல்லும்போது பாடம் தெரிந்திருக்கும், சந்தேகங்களை மட்டும் கேட்டு தெளிவுபடுத்திக்கொள்ள முடிந்தது.
தேர்வு முறை மற்றும் பலன்கள்
தினசரி படிப்பு நேரத்துடன், தேர்வு முறையை நன்கு புரிந்துகொள்வதிலும் கவனம் செலுத்தினார். கடந்த ஆண்டு கேள்ரித்தாள்களை (Previous Year Questions - PYQs) தொடர்ந்து பயிற்சி செய்தது, அவரது வேகத்தையும் துல்லியத்தையும் அதிகப்படுத்தியது. இந்த முயற்சிகளின் பலனாக, JEE மெயின் 2023 தேர்வில் 99.98% பெர்சென்டைல் மற்றும் JEE அட்வான்ஸ்டு தேர்வில் அகில இந்திய அளவில் 349 ரேங்க் பெற்றார். இதன் மூலம், இந்திய தொழில்நுட்பக் கழகமான (IIT) பம்பாயில் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் இடம் பிடித்தார்.
ஆரம்பகால கல்வி மதிப்பெண்கள் ஒருவரின் திறனை முழுமையாகக் காட்டுவதில்லை. எதிர்கால சாதனைகளுக்கு ஒருபோதும் தடையாக இருக்காது என்பதை ஜெயின்ந்திரஜீத்தின் அனுபவம் உணர்த்துகிறது. தற்போது கல்வி அழுத்தத்தில் இருப்பவர்கள் அல்லது கடந்தகால மதிப்பெண்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், தினசரி இலக்குகளை நிர்ணயித்து, முறையான கற்றல் வளங்களைப் பயன்படுத்தி அறிவை வளர்த்துக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்.
