மாநாட்டால் ஹோட்டல் விலை ராக்கெட் வேகம்!
இந்தியா AI Impact Summit 2026 மாநாட்டிற்காக டெல்லி தயாராகி வரும் நிலையில், நகரத்தின் சொகுசு ஹோட்டல் அறைகளின் வாடகை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. வழக்கமாக ஒரு இரவுக்கு ₹20,000 முதல் ₹40,000 வரை இருக்கும் இந்த அறைகள், இப்போது பல மடங்கு விலை உயர்ந்துள்ளன. குறிப்பாக, The Imperial ஹோட்டலில் ஒரு சொகுசு சூட் (Luxury Suite) மட்டும் ஒரு இரவுக்கு சுமார் ₹11.64 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது அந்த அறையின் வழக்கமான விலையான ஒரு இரவுக்கு ₹15,000 - ₹25,000 (தோராயமாக $190 - $312) என்பதை விட மிக அதிகம். இதேபோல், The Oberoi ஹோட்டலில் வழக்கமாக $344 (தோராயமாக ₹28,000) என்ற விலையில் கிடைக்கும் அறைகள், இப்போது ₹5.6 லட்சம் வரை விலை போவதாக கூறப்படுகிறது.
35,000 பேர் வருகை - திடீர் தேவை உயர்வு
இந்த மாநாட்டிற்கு உலகம் முழுவதிலும் இருந்து 35,000 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் (Delegates) வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் உலகளாவிய தொழில்நுட்ப தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் அடங்குவர். இந்த திடீர் மற்றும் அதீத தேவை உயர்வால், டெல்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களான The Imperial, The Oberoi, The Leela Palace, மற்றும் Taj Palace ஆகியவை பெரும் வருவாய் ஈட்டுகின்றன. அதிக தேவைக்கு ஏற்ப சொகுசு அறைகளின் விநியோகம் குறைவாக இருப்பதே இந்த அதிரடி விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணம். இது போன்ற பெரிய சர்வதேச மாநாடுகளின் போது இது சகஜமான ஒன்றாக இருந்தாலும், இந்தியாவின் hospitality sector எவ்வளவு quick-ஆக இதுபோன்ற demand shocks-க்கு பாதிக்கப்படுகிறது என்பதை இது காட்டுகிறது.
AI-ன் எதிர்காலம் மற்றும் டெல்லியின் நிலை
இந்தியாவின் AI சந்தை அடுத்த சில ஆண்டுகளில் அதிவேகமாக வளரும் என கணிக்கப்பட்டுள்ளது. 2027-க்குள் $17 பில்லியன் டாலர்களையும், 2032-க்குள் $130 பில்லியன் டாலர்களையும் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், எதிர்காலத்தில் இது போன்ற AI தொடர்பான முக்கிய மாநாடுகள் டெல்லியில் மேலும் அதிகரிக்கும். இதற்கு ஏற்ப, டெல்லியின் hospitality infrastructure மற்றும் விலை நிர்ணய உத்திகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.
சிக்கல்களும், கேள்விகளும்
இந்த விலை ஏற்றம், இந்தியாவில் சொகுசு ஹோட்டல் அறைகளின் எண்ணிக்கை (Inventory) குறைவாக இருப்பதையும் காட்டுகிறது. துபாய், ஷாங்காய், நியூயார்க் போன்ற நகரங்களுடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் மொத்த ஹோட்டல் அறை எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இந்த நிலை, அதிக செலவு செய்யும் சர்வதேச பிரதிநிதிகளுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும், இந்தியாவின் ஒரு சிறந்த சுற்றுலா மற்றும் வணிகத் தலமாக விளங்கும் நற்பெயருக்கு (Reputation) பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் முன்னாள் இன்ஃபோசிஸ் CFO மொஹன்தாஸ் பாய் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற மாநாடுகள் பொருளாதார நன்மைகளைக் கொடுத்தாலும், தேவையை சமநிலைப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில், இது சுரண்டலாக பார்க்கப்பட வாய்ப்புள்ளது.