SIP பங்களிப்பில் ஒரு சிறு சரிவு
AMFI தரவுகளின்படி, ஏப்ரல் மாதத்தில் மியூச்சுவல் ஃபண்டுகளுக்கான SIP பங்களிப்பு சற்றே குறைந்து ₹31,115 கோடி ஆக பதிவாகியுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் இது ₹32,087 கோடியாக இருந்தது. இந்த சிறிய சரிவு, பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களின் ஈடுபாட்டை குறைக்கவில்லை.
முதலீட்டாளர்களின் பேவரைட்: ஈக்விட்டி ஃபண்டுகள்
தி வெல்த் கம்பெனி மியூச்சுவல் ஃபண்டின் CIO–Debt ஆக இருக்கும் உமேஷ் ஷர்மா கூறுகையில், 'முதலீட்டாளர்கள் ஈக்விட்டியில் தொடர்ந்து முதலீடு செய்கின்றனர். முக்கியமாக ஃப்ளெக்ஸி-கேப், மிட்-கேப், மற்றும் ஸ்மால்-கேப் ஃபண்டுகளில் முதலீடுகள் குவிந்தன. இது சந்தையின் பல்வேறு பிரிவுகளில் வளர்ச்சி வாய்ப்புகளை தேடும் முதலீட்டாளர்களின் விருப்பத்தை காட்டுகிறது' என்றார். இதன் மூலம், எல்லா விதமான மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் ஃபண்டுகளிலும் முதலீட்டாளர்களின் ஆர்வம் நீடிப்பது தெரிகிறது.
ஹைப்ரிட் மற்றும் டைவர்சிஃபைடு திட்டங்களில் அதிக ஆர்வம்
மேலும், ஹைப்ரிட் மற்றும் டைவர்சிஃபைடு திட்டங்களும் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. மொத்தம் ₹20,565 கோடி இந்த திட்டங்களுக்கு வந்துள்ளது. குறிப்பாக, ஆர்பிட்ரேஜ் மற்றும் மல்டி-அசெட் அலோகேஷன் ஃபண்டுகள் இதில் முக்கிய பங்கு வகித்தன. இது, சந்தை ஏற்ற இறக்கங்களை குறைத்து, வருமானத்தை ஈட்டும் பன்முகப்படுத்தப்பட்ட அணுகுமுறையின் மீதான ஆர்வத்தை காட்டுகிறது. மறுபுறம், டெப்ட் ஃபண்டுகளில் குறுகிய கால முதலீடுகளே அதிகம் வந்துள்ளன. இது ஒரு தற்காலிக உத்தி போல தெரிகிறது.
