பாதுகாப்புத் துறையில் பாதுகாப்பு முதலீடு!
இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தித் துறை, தற்போதைய சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி வருகிறது. தேசிய பாதுகாப்புத் தேவைகள் மற்றும் 'மேக் இன் இந்தியா' போன்ற அரசின் கொள்கை முடிவுகள், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கின்றன. இதனால், இந்தத் துறையில் முதலீடு செய்ய வாய்ப்புகள் பெருகி வருகின்றன.
பாதுகாப்புத் துறையின் பிரம்மாண்ட வளர்ச்சி:
இந்திய பாதுகாப்பு உற்பத்தித் துறை, அரசின் சிறப்புக் கவனம் மற்றும் பட்ஜெட் ஒதுக்கீடு காரணமாக பெரிய மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. பாதுகாப்பு கொள்முதல் நடைமுறைகள் (Defence Acquisition Procedure - DAP 2020) மற்றும் எதிர்காலத்தில் வரவிருக்கும் பாதுகாப்பு கொள்முதல் கையேடு (Defence Procurement Manual - DPM 2025) ஆகியவை, உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்தி, நீண்ட காலத்திற்கு இந்தத் துறைக்கு ஒரு ஸ்திரமான வளர்ச்சியை உறுதி செய்கின்றன. உள்நாட்டு உற்பத்தியை கணிசமாக உயர்த்தி, ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கத்துடன் அரசு செயல்படுகிறது. இது, பாதுகாப்புத் துறையில் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் நீண்ட கால முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகிறது.
Mirae Asset-ன் புதிய திட்டங்கள்:
Mirae Asset Mutual Fund, முதலீட்டாளர்களுக்காக Mirae Asset BSE India Defence ETF மற்றும் Mirae Asset BSE India Defence ETF Fund of Fund (FOF) ஆகிய இரண்டு திட்டங்களை புதிதாகக் கொண்டு வந்துள்ளது. இதில் ETF ஆனது, BSE India Defence Total Return Index-ன் செயல்திறனைப் பிரதிபலிக்கும் வகையில் செயல்படும். Fund of Fund ஆனது, இந்த ETF-ன் யூனிட்களில் முதலீடு செய்யும். இந்த இரண்டு திட்டங்களுக்கான New Fund Offer (NFO) வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
ETF-க்கான NFO பிப்ரவரி 10 ஆம் தேதியும், Fund of Fund-க்கான NFO பிப்ரவரி 16 ஆம் தேதியும் நிறைவடைகிறது. ETF பிப்ரவரி 16 முதல் வர்த்தகம் செய்யக் கிடைக்கும், அதைத் தொடர்ந்து Fund of Fund பிப்ரவரி 24 முதல் வர்த்தகமாகும். இந்த இரண்டு திட்டங்களிலும் முதலீடு செய்ய குறைந்தபட்ச தொகை ₹5,000 ஆகும்.
குறியீட்டின் (Index) பங்கு மற்றும் செயல்திறன்:
BSE India Defence Index, பாதுகாப்பு உற்பத்திச் சங்கிலியில் உள்ள பல முக்கிய நிறுவனங்களை உள்ளடக்கியுள்ளது. இதில் பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் அடங்கும். இந்த குறியீடு, தளவாடங்கள் (platforms), எலக்ட்ரானிக்ஸ், வெடிமருந்துகள் (ammunition) மற்றும் ஒருங்கிணைந்த உற்பத்தி தீர்வுகள் போன்ற முக்கியப் பிரிவுகளில் முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகிறது. கடந்த காலங்களில், இந்த குறியீடு மற்ற முக்கிய சந்தைக் குறியீடுகளை விட சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
முதலீட்டுக்கான காரணங்கள்:
Mirae Asset Investment Managers (India)-ன் ETF தயாரிப்புப் பிரிவின் தலைவர் சித்தார்த் ஸ்ரீவத்சவா கூறுகையில், 'இந்தியாவின் பாதுகாப்புச் செலவினங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதும், உள்நாட்டு உற்பத்தியில் அரசு கவனம் செலுத்துவதும், உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு நிலையான வாய்ப்புகளை உருவாக்கித் தரும்' என்றார். அரசின் 'தற்சார்பு இந்தியா' கொள்கை, இத்துறையின் வளர்ச்சிக்கு முக்கிய உந்து சக்தியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.