சந்தை சரிந்தாலும் ஈக்விட்டிக்கு வரவேற்பு!
மார்ச் மாதத்தில் Equity Mutual Funds-ல் நிகர முதலீடுகள் (Net Inflows) 55.5% அதிகரித்து ₹40,366 கோடியாக உயர்ந்துள்ளது. இது ஈக்விட்டி திட்டங்களில் முதலீட்டாளர்களின் தொடர்ச்சியான ஆர்வத்தைக் காட்டுகிறது.
குறிப்பாக, Exchange Traded Funds (ETFs) இந்த முறை முதலீட்டாளர்களை அதிகம் கவர்ந்துள்ளது. கடந்த பிப்ரவரியில் ₹4,487 கோடி மட்டுமே முதலீடாக வந்த நிலையில், இந்த மார்ச் மாதத்தில் மட்டும் ₹19,802 கோடி வந்து குவிந்துள்ளது.
சந்தை வீழ்ச்சியால் AUM பாதிப்பு
Equity Funds-ல் முதலீடுகள் வலுவாக வந்தாலும், மியூச்சுவல் ஃபண்ட் துறையின் மொத்த சொத்து மேலாண்மை (AUM) 10.1% குறைந்து ₹73.73 லட்சம் கோடியாக சரிந்துள்ளது. முந்தைய மாதம் இது ₹82.03 லட்சம் கோடி ஆக இருந்தது.
சந்தை நிலவரம் மற்றும் பரவலான ஈக்விட்டி சரிவு காரணமாகவே இந்த சுருக்கம் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இது பெரிய அளவில் முதலீட்டாளர்கள் பணத்தை எடுத்ததால் ஏற்பட்டதல்ல.
மற்ற ஃபண்டுகளின் நிலை
செக்டோரல் மற்றும் தீமேட்டிக் ஃபண்ட்ஸ் ₹2,699 கோடி அளவிலான மிதமான முதலீட்டைப் பெற்றுள்ளன. கோல்டு ETFs-ன் முதலீடுகளும் பிப்ரவரியை விட குறைவாகவே இருந்துள்ளன.
டெட் ஃபண்ட் (Debt Fund) பிரிவில், லிக்விட் ஃபண்ட்ஸ் (Liquid Funds) மட்டும் ₹1.34 லட்சம் கோடி பணத்தை வெளியேற்றியுள்ளன. இது பெரும்பாலும் ஆண்டு இறுதி கணக்குகள் சீரமைப்பு (Year-end Rebalancing) காரணமாக இருக்கலாம். கார்ப்பரேட் பாண்ட் ஃபண்ட்ஸ் மற்றும் கிரெடிட் ரிஸ்க் ஃபண்ட்ஸ்-லும் பண வெளியேற்றம் காணப்பட்டது. இது ஃபிக்ஸட் இன்கம் சந்தையில் ஒருவித எச்சரிக்கை உணர்வைக் காட்டுவதாக அமைந்துள்ளது.