பாகிஸ்தான் பங்கேற்கும் கிரிக்கெட் தொடரை VETO தளம் ஒளிபரப்பத் தொடங்கியுள்ளது. மே 2025-ல் மத்திய அரசு பிறப்பித்த கட்டுப்பாடுகளை இது மீறுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
India TV புரொமோட்டர்களால் ஆதரிக்கப்படும் VETO ஸ்டீமிங் தளம், பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதும் கிரிக்கெட் தொடரை ஒளிபரப்பத் தொடங்கியுள்ளது. இது மே 2025-ல் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் (MIB) பிறப்பித்த உத்தரவுக்கு சவாலாக அமைந்துள்ளது.
சர்ச்சையின் பின்னணி
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் நாட்டு திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் மற்றும் மியூசிக் போன்றவற்றைத் தடை செய்ய மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. ஆனால், இந்தத் தடை 'நேரடி விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு' (Live International Sports) பொருந்துமா என்பதில் தெளிவு இல்லை.
VETO-வின் வாதம் என்ன?
இந்தத் தொடர் International Cricket Council (ICC) அனுமதியுடன் நடப்பதால், இது கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கான (Entertainment content) வரம்பிற்குள் வராது என VETO வாதிடுகிறது. இது போன்ற நிகழ்ச்சிகள் தேசப் பாதுகாப்பிற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பது நிறுவனத்தின் கருத்து.
முதலீட்டாளர்கள் கவனத்திற்கு
முன்னதாக, ஏப்ரல் 2025-ல் FanCode, Sony Sports Network மற்றும் Zee Entertainment Enterprises போன்றவை பாகிஸ்தான் சார்ந்த நிகழ்ச்சிகளைத் தவிர்த்தன. தற்போது VETO-வின் இந்த துணிச்சலான முடிவு, இதர ஊடக நிறுவனங்களுக்கு ஒரு சோதனைக்களமாக மாறியுள்ளது. அமைச்சகம் இந்த விவகாரத்தில் தெளிவான விளக்கம் அளிக்காவிட்டால், விளம்பர வருவாய் மற்றும் சப்ஸ்கிரிப்ஷன் எண்ணிக்கையில் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக சந்தை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
