அமலாக்க இயக்குநரகத்தின் (ED) பெங்களூரு பிரிவு, WinZO மற்றும் GamezKraft (Pocket52.com-ன் ஆப்ரேட்டர்) ஆகிய ஆன்லைன் கேமிங் நிறுவனங்களின் 11 இடங்களில் சோதனை நடத்தியது. வீரர்களுக்கு பாதகமான அல்காரிதம் முறைகேடுகள் மற்றும் நிறுவன விளம்பரதாரர்களுக்கு சொந்தமான கிரிப்டோ வாலட்கள் மூலம் சாத்தியமான பணமோசடி குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.