சமூக வலைதளங்களில் சிறுவர்கள் பயன்படுத்துவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வரக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்கும் Supreme Court, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது பெரிய Tech நிறுவனங்களின் வருவாயை பாதிக்கக்கூடும்.
சமூக வலைதளங்களில் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜாய்மால்யா பாக்ஜி அடங்கிய அமர்வு விசாரணைக்கு எடுத்துள்ளது. இதில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் மற்றும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு (NCPCR) நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கோரிக்கையின் முக்கியத்துவம் என்ன?
தற்போதைய சமூக வலைதள வடிவமைப்பு (Platform Design) சிறுவர்களின் கவனத்தை ஈர்த்து, அவர்களை அடிமையாக்கும் வகையில் இருப்பதாக மனுதாரர் வாதிடுகிறார். இதனால் அவர்களுக்கு தூக்கமின்மை, மன அழுத்தம் மற்றும் சமூகத்திலிருந்து விலகி இருக்கும் பழக்கம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. எனவே, கட்டாய வயது சரிபார்ப்பு (Mandatory Age Verification) மற்றும் பெற்றோர் சம்மதம் (Parental Consent) கட்டாயமாக்கப்பட வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக உள்ளது.
முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை
சமூக வலைதள நிறுவனங்களின் வருவாய் பெருமளவு இந்த 'Engagement Metrics' எனப்படும் பயனர் செலவிடும் நேரத்தை பொறுத்தே அமைகிறது. ஒருவேளை நீதிமன்றம் கடுமையான வயதுக் கட்டுப்பாடுகளை அமல்படுத்தினால், அந்த தளங்களின் பயன்பாடு குறைய வாய்ப்புள்ளது. இது தவிர, புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கவும், தரவு பாதுகாப்பு மற்றும் சரிபார்ப்பு முறைகளை மேம்படுத்தவும் நிறுவனங்கள் பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டியிருக்கும். இது அவற்றின் 'Compliance Cost'-ஐ கணிசமாக உயர்த்தும்.
தற்போது நடைமுறையில் உள்ள 2021 தகவல் தொழில்நுட்ப விதிகளை (Information Technology Rules) விட, புதிய விதிகள் அதிக கெடுபிடிகளுடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை டிசம்பர் 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதுவரை டெக் துறை நிறுவனங்களின் பங்குகளை கவனிப்பது அவசியம்.
