சஹாரா குழுமம், அதானி குழுமத்திற்கு சொத்துக்களை விற்க அனுமதி கோரிய மனு மீதான விசாரணையை சுப்ரீம் கோர்ட் ஆறு வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது. 34 சொத்துக்கள் தொடர்பாக ஆட்சேபனைகளை எழுப்பியுள்ள அமிகஸ் க்யூரி ஷெகர் நாப்டே தாக்கல் செய்த குறிப்புக்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. சஹாரா குழுமத்தின் கூட்டுறவு சங்கங்களுடனான தொடர்பு காரணமாக, கூட்டுறவு அமைச்சகமும் (Ministry of Cooperation) இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.