மும்பையில் அக்டோபர் 2-ம் தேதி Cockroach Janta Party நடத்திய போராட்டத்தின் போது, குழந்தைகளை முன்னிறுத்தி மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதாக எழுந்த புகாரை அடுத்து, National Human Rights Commission (NHRC) விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
மும்பை சிவாஜி பார்க்கில் அக்டோபர் 2, 2026 அன்று நடந்த போராட்டத்தின் பின்னணியில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி Cockroach Janta Party நடத்திய இந்த போராட்டத்தில், காவல் துறையினரின் நடவடிக்கையைத் தவிர்க்கும் நோக்கில் குழந்தைகளை முன்னிறுத்தியதாக Sewa Nyaya Utthan Foundation புகார் அளித்துள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் NHRC இப்போது தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.
சட்ட ரீதியான சிக்கல்கள்
இந்த விவகாரத்தில் Juvenile Justice (Care and Protection of Children) Act, 2015-ன் கீழ் விதிகள் மீறப்பட்டுள்ளனவா என்பது ஆய்வு செய்யப்படுகிறது. குறிப்பாக, குழந்தைகளைக் கொடுமைப்படுத்துதல் தொடர்பான பிரிவு 75 மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துதல் தொடர்பான பிரிவு 83(2) ஆகியவற்றின் கீழ் வழக்கு பாய வாய்ப்புள்ளது.
டிஜிட்டல் தடயங்கள் ஆய்வு
இந்தச் சம்பவத்தில் திட்டமிடப்பட்ட சதி உள்ளதா என்பதைக் கண்டறிய மும்பை காவல்துறை தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் தடயவியல் சோதனைக்கு (Forensic Analysis) உட்படுத்தப்படுகின்றன.
மேலும், போராட்டத்திற்கான திட்டமிடல் சமூக வலைதளங்களில் அல்லது மெசேஜிங் ஆப்ஸ்களில் முன் கூட்டியே விவாதிக்கப்பட்டதா என்பதைக் கண்டறிய, Ministry of Electronics and Information Technology (MeitY) மற்றும் X Corp. நிறுவனங்களுக்கு NHRC உத்தரவிட்டுள்ளது. அந்தப் பதிவுகளையும், தகவல்களையும் பாதுகாத்து வைக்குமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய அனைத்து அரசு மற்றும் தனியார் அமைப்புகளும் தங்களின் அறிக்கையை அடுத்த 7 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என NHRC காலக்கெடு விதித்துள்ளது. இந்த அறிக்கை பொதுக்கூட்டங்களில் சிறுவர்களைப் பயன்படுத்துவது தொடர்பான சட்ட நடவடிக்கைகளில் முக்கியத் திருப்பமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
