Zee குழும நிறுவனர் Subhash Chandra-வின் தனிப்பட்ட திவாலான நிலை தொடர்பான வழக்கில் NCLT முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. ஒட்டுமொத்தமாக ₹22,006.57 கோடி கடன் நிலுவையில் உள்ள நிலையில், வெறும் ₹6.5 கோடி ரூபாயை மட்டும் திருப்பிச் செலுத்தி வழக்கை முடித்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
என்ன நடந்தது?
டெல்லி NCLT அமர்வு, Subhash Chandra-வின் பர்சனல் இன்சால்வென்சி (Personal Insolvency) திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த விவகாரத்தில், கடன் கொடுத்தவர்களுக்குக் கிடைக்க வேண்டிய மீட்புத் தொகை (Recovery Rate) வெறும் 0.03% மட்டுமே. அதாவது, ₹22,006.57 கோடி கடன் தொகையில், வெறும் ₹6.5 கோடி மட்டுமே திரும்பப் பெற முடியும்.
தீர்ப்பின் பின்னணி
இந்த வழக்கில் பெஞ்ச் உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு நிலவியது. இறுதியாக, மூன்றாவது நீதித்துறை உறுப்பினரான Nilesh Sharma, இந்தத் திட்டத்தை அனுமதித்தார். நவம்பர் 2024-ல் நடந்த வாக்கெடுப்பில், 80.814% வாக்குகள் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக இருந்தன. இருப்பினும், HDFC Bank, Axis Bank, Canara Bank, RBL Bank, Union Bank of India மற்றும் LIC Housing Finance போன்ற முன்னணி வங்கிகள் இந்தத் திட்டத்தை கடுமையாக எதிர்த்தன என்பது குறிப்பிடத்தக்கது.
சர்ச்சைகள் என்ன?
இந்தக் கடன் விவகாரம் Vivek Infracon நிறுவனம் பெற்ற ₹170 கோடி கடனுக்காக Subhash Chandra அளித்த பர்சனல் கியாரண்டியால் உருவானது. கடனாளிகள் தரப்பில், இந்தத் தீர்மானத்திற்கு வாக்களித்தவர்கள் 'தொடர்புடைய தரப்பினர்' (Related parties) என்று குற்றம் சாட்டப்பட்டது. மேலும், ₹6.5 கோடி என்பது ஒட்டுமொத்த கடன் தொகையுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவான தொகை என்றும் வாதிடப்பட்டது.
இந்த சூழலில், ஏற்கனவே SEBI அமைப்பால் Subhash Chandra மற்றும் Punit Goenka ஆகியோர் ஒரு வருட காலத்திற்கு பங்குச்சந்தை நடவடிக்கைகளில் ஈடுபடத் தடை செய்யப்பட்டுள்ளனர். இது போன்ற நிகழ்வுகள், நிறுவனத்தின் நிர்வாகம் மற்றும் எதிர்காலச் செயல்பாடுகள் குறித்த கேள்விகளை முதலீட்டாளர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.
