15 வருடங்கள் பழமையான அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்ட (FEMA) வழக்கில் அமலாக்கத்துறைக்கு (ED) ஒத்துழைப்பு அளிப்பதாக அனில் அம்பானி தெரிவித்துள்ளார். ஜெய்ப்பூர்–ரீங்கஸ் நெடுஞ்சாலைத் திட்டம் தொடர்பான சுமார் 100 கோடி ரூபாய் ஹவாலா மோசடி வழக்கு இது. அம்பானி, எந்த நேரத்திலும், ஆன்லைன் மூலமாகவும் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்யத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். மேலும், இந்த வழக்கு அந்நிய செலாவணி சம்பந்தப்பட்டது அல்ல, மாறாக ஒரு உள்நாட்டு சாலை ஒப்பந்ததாரர் சம்பந்தப்பட்டது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.