ஐபிஓ (IPO) லிஸ்டிங் லாபத்தை மட்டும் நம்பி முதலீடு செய்ய வேண்டாம் என மார்க்கெட் நிபுணர் Deven Choksey எச்சரித்துள்ளார். நிறுவனத்தின் பிசினஸ் மாடல் மற்றும் நிதிநிலைத்தன்மையை ஆராய்வதே நீண்டகால லாபத்திற்கு வழிவகுக்கும்.
ஐபிஓ-வில் கிடைக்கும் லிஸ்டிங் லாபத்தை (Listing Gains) பார்த்து பல ரீடைல் முதலீட்டாளர்கள் ஈர்க்கப்படுகிறார்கள். லிஸ்டிங் ஆவதற்கு முன்பே கிரே மார்க்கெட் பிரீமியம் (GMP) பார்த்து கணக்குப் போடுவது உடனடி லாபத்தை தரலாம், ஆனால் இதுவே ஆபத்துகளுக்கு முதல் படி.
லிஸ்டிங் டிராப் (Listing Trap)
DRChoksey FinServ-ன் மேனேஜிங் டைரக்டர் Deven Choksey கருத்துப்படி, லிஸ்டிங் நாளன்று கிடைக்கும் லாபத்தை மட்டும் துரத்துவது முதலீட்டாளர்களுக்குப் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும். தகுதியற்ற நிறுவனங்களில் அதிக விலைக்கு (Overvalued) முதலீடு செய்வதால், நீண்ட கால அடிப்படையில் உங்கள் முதலீடு கரைந்துவிடும்.
Fresh Issue vs OFS
முதலீடு செய்யும்போது, கம்பெனி வெளியிடும் ஷேர்கள் எதற்காக என்பதை கவனிக்க வேண்டும்.
- Fresh Issue: கம்பெனி புதிய ஷேர்களை வெளியிட்டு, அந்தப் பணத்தை பிசினஸ் விரிவாக்கத்திற்குப் பயன்படுத்துவது. இது நீண்ட காலத்திற்கு நல்லது.
- Offer for Sale (OFS): ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்கள் (Private Equity அல்லது Early Backers) தங்கள் பங்குகளை விற்று லாபம் பார்க்க வெளியேறுவது. இங்கே கம்பெனியின் உண்மையான வளர்ச்சி வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும்.
கவனிக்க வேண்டிய 4 விஷயங்கள்:
- Capital Raise: நிறுவனம் ஏன் பணம் திரட்டுகிறது?
- Business Model: அந்த கம்பெனி எப்படி சம்பாதிக்கிறது? அதன் பிசினஸ் எதிர்காலத்தில் நிலைத்து நிற்குமா?
- Financials: கடந்த காலங்களில் நிறுவனத்தின் வளர்ச்சி சீராக உள்ளதா?
- Risk Factors: Prospectus-ல் குறிப்பிடப்பட்டுள்ள ரிஸ்க் என்ன? மார்க்கெட்டிங் விளம்பரங்களை விட, இந்த ஆவணத்தில் உள்ள உண்மைகளை வாசிப்பது அவசியம்.
தொழில்நுட்பங்கள் அல்லது AI டூல்கள் டேட்டாக்களை அனலைஸ் செய்ய உதவினாலும், சொந்தமாக கம்பெனியின் பிசினஸ் மாடலை புரிந்துகொண்டு முதலீடு செய்வதுதான் உங்களை மார்க்கெட் ஏற்ற இறக்கங்களில் இருந்து காக்கும்.
