தன்னுடைய முக்கிய சப்சிடியரி நிறுவனங்களான South Eastern Coalfields மற்றும் Mahanadi Coalfields ஆகியவற்றை இந்த நிதியாண்டு முடிவதற்குள் பங்குச்சந்தையில் கொண்டு வர Coal India அதிரடி திட்டமிட்டுள்ளது.
அரசு வழிகாட்டுதலின்படி, 2030-க்குள் தனது அனைத்து நிலக்கரி உற்பத்தி நிறுவனங்களையும் தனித்தனியாக பங்குச்சந்தையில் (List) கொண்டு வர Coal India திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாகவே தற்போது இந்த புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
IPO திட்டம் என்ன?
South Eastern Coalfields (SECL) IPO மூலம் சுமார் ₹8,000 கோடி முதல் ₹10,000 கோடி வரை நிதி திரட்டப்படலாம் என்று தெரிகிறது. இது புதிய பங்குகள் வெளியீடு மற்றும் Offer for Sale (OFS) என கலந்த கலவையாக இருக்கும். குழுமத்தின் அதிக லாபம் ஈட்டும் நிறுவனங்களில் ஒன்றான Mahanadi Coalfields (MCL)-க்கும் இதே போன்ற திட்டமே வகுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 2026-ம் ஆண்டின் தொடக்கத்தில் Bharat Coking Coal மற்றும் Central Mine Planning and Design Institute ஆகியவை வெற்றிகரமாக பங்குச்சந்தையில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.
கவனிக்க வேண்டிய சவால்கள்
இந்த நிறுவனங்களின் வளர்ச்சி என்பது சுற்றுச்சூழல் அனுமதி, நிலம் கையகப்படுத்துதல் மற்றும் நிலக்கரி போக்குவரத்தில் உள்ள சிக்கல்களை பொறுத்தே அமையும். மேலும், மின்சாரம் மற்றும் ஸ்டீல் துறைகளில் இருந்து வரும் டிமாண்ட் மற்றும் இ-ஆக்ஷன் (e-auction) மூலம் கிடைக்கும் பிரீமியம் வருமானம் குறைய வாய்ப்பிருந்தால், அது லாபத்தை பாதிக்கலாம்.
முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?
தற்போது Coal India ஷேர் விலை ₹401 - ₹405 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. செப்டம்பர் மாத தொடக்கத்தில் இந்த பங்கிற்கு எக்ஸ்-டிவிடெண்ட் (Ex-dividend) தேதி வருவதால் முதலீட்டாளர்கள் அதை கவனிக்கலாம். சந்தை நிலவரம் மற்றும் ரெகுலேட்டரி அனுமதிகளை பொறுத்தே இந்த IPO-வின் காலவரிசை மற்றும் வேல்யுவேஷன் அமையும்.
