பெரு நாடு அடுத்த ஆண்டுக்குள் இந்தியா பாணியில் ரியல்-டைம் டிஜிட்டல் பேமென்ட் முறையை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம், தென்னமெரிக்க நாடுகளிலேயே இந்தியா வழங்கும் யூனிஃபைடு பேமென்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) போன்ற ஒரு கட்டமைப்பை ஏற்றுக்கொள்ளும் முதல் நாடாக பெரு திகழ உள்ளது. NPCI இன்டர்நேஷனல் பேமென்ட்ஸ் லிமிடெட் மற்றும் பெருவின் சென்ட்ரல் ரிசர்வ் பேங்க் இடையேயான கூட்டுறவின் விளைவாக இந்த முயற்சி, நிதி உள்ளடக்கத்தை அதிகரிக்கவும், லட்சக்கணக்கான மக்களுக்கு உடனடி பரிவர்த்தனைகளை இயக்கவும் நோக்கமாகக் கொண்டுள்ளது.