FBI தனது மோஸ்ட் வான்டட் குற்றவாளிகள் பட்டியலில் Satinderjeet Singh (எனும்) Goldy Brar-ஐ சேர்த்துள்ளது. இவரைப் பற்றிய தகவல் தருபவர்களுக்கு **$1 மில்லியன்** டாலர் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான FBI, கோல்டி ப்ராரை தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்து உலக நாடுகளை கவனிக்க வைத்துள்ளது. ரவுடியிசம், மிரட்டி பணம் பறித்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
ஆபரேஷன் ஹார்ட்பால் (Operation Hardball)
இந்த தேடுதல் வேட்டை, 'ஆபரேஷன் ஹார்ட்பால்' என்ற நீண்ட கால விசாரணைத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதில் கோல்டி ப்ரார், Lawrence Bishnoi கும்பலின் முக்கிய தலைவர்களில் ஒருவராகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவரது குற்ற வலைப்பின்னல் அமெரிக்கா, கனடா மற்றும் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்குப் பரவியிருப்பதாக புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
FBI-ன் எச்சரிக்கை
கோல்டி ப்ரார் ஆயுதம் ஏந்தியவர் மற்றும் ஆபத்தானவர் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளார். கலிபோர்னியா மற்றும் கனடாவின் பல்வேறு பகுதிகளில் அவர் பதுங்கியிருப்பதாகக் கருதப்படும் நிலையில், அவரைப் பிடிப்பது தற்போதைய முதன்மை நோக்கம் என FBI-ன் லாஸ் ஏஞ்சல்ஸ் அலுவலக அதிகாரி Patrick Grandy உறுதிப்படுத்தியுள்ளார். சர்வதேச எல்லைகளைத் தாண்டிச் செயல்படும் இது போன்ற குற்றக்கும்பல்களின் நிதி மற்றும் ஆயுத விநியோகச் சங்கிலியை உடைப்பதே இந்த நடவடிக்கையின் இறுதி இலக்காகும்.
