திபெத்-நேபாள எல்லையில் உருவாகியுள்ள தடுப்பு ஏரியால் (Barrier Lake) கடும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால், சீன அரசு 'Level-IV' அவசரநிலையை அறிவித்துள்ளது.
திபெத்-நேபாள எல்லைப் பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளம் காரணமாக, ச்சோச்சென் கோலா மற்றும் புரேபு சாங்போ ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் இயற்கையான தடுப்பு ஏரி ஒன்று உருவாகியுள்ளது. தற்போது இந்த ஏரியில் 2 மில்லியன் கன மீட்டர் தண்ணீர் தேங்கியுள்ளது. வரும் 72 மணி நேரத்திற்குள் இது 3 மில்லியன் கன மீட்டர் வரை உயரக்கூடும் என்பதால், பெரும் ஆபத்து சூழந்துள்ளது.
வர்த்தக மையத்திற்கு ஆபத்து
இந்த ஏரி உடைப்பு ஏற்பட்டால், சீனா மற்றும் நேபாளத்திற்கு இடையிலான மிக முக்கியமான வர்த்தக மையமான Gyirong Port கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும். இதனால் சாலைகள் மற்றும் எல்லைக் கட்டமைப்பு வசதிகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட வாய்ப்புள்ளது.
மீட்புப் பணிகள்
இந்த சவாலான சூழலை கையாள, சீன அரசு China Anneng என்ற பொறியியல் நிறுவனத்தை களமிறக்கியுள்ளது. மலைப்பாங்கான பகுதி, சேறு மற்றும் அடர்ந்த காட்டுப்பகுதி என்பதால் வீரர்களால் எளிதில் செல்ல முடியவில்லை. எனவே, அதிநவீன ட்ரோன் தொழில்நுட்பம் மற்றும் 3D மேப்பிங் மூலம் பாதிப்புகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த அவசரக்கால பணிகளில் People’s Liberation Army Western Theatre Command மற்றும் National Space Administration ஆகிய அமைப்புகளும் இணைந்து செயல்படுகின்றன. சாட்டிலைட் தரவுகள் மூலம் ஏரியின் நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மழையினால் நீர்மட்டம் உயரும் முன்பே ஏரியை பாதுகாப்பாகக் குறைக்க தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
