லாபம் அசுர வளர்ச்சி!
Niva Bupa Health Insurance நிறுவனம், Q4FY26-ல் அசாதாரணமான லாப வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ₹206.08 கோடி லாபம் ஈட்டியிருந்த நிலையில், இந்த காலாண்டில் நெட் ப்ராஃபிட் 67.4% உயர்ந்து ₹345.13 கோடி ஆக உள்ளது.
வருவாயிலும் பெரும் ஏற்றம்
இந்த லாப வளர்ச்சிக்கு இணையாக, கம்பெனியின் வருவாயும் கணிசமாக உயர்ந்துள்ளது. Q4FY26-ல் ஈட்டப்பட்ட பிரீமியம் (Premium Earned) ₹1,971.95 கோடி ஆக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டு ₹1,527.42 கோடி ஆக இருந்தது. மேலும், மொத்த வருமானம் (Total Income) ₹2,077.66 கோடி ஆக உயர்ந்துள்ளது (முந்தைய ஆண்டு ₹1,564.73 கோடி).
முழு நிதியாண்டு செயல்திறன்
முழு நிதியாண்டு 2026-க்கு, Niva Bupa-வின் மொத்த எழுதப்பட்ட பிரீமியம் (GWP) 27% ஆண்டு வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. FY26-ல் ₹9,433 கோடி GWP-யை எட்டியுள்ளது. குறிப்பாக, Q4-ல் மட்டும் ₹3,123 கோடி GWP-யை ஈட்டியுள்ளது, இது 39% வளர்ச்சியாகும்.
சந்தைப் பங்கும், சேவைத் திறனும் மேம்பட்டது
ரிடெய்ல் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரிவில் Niva Bupa தனது மார்க்கெட் ஷேரை 10.1% ஆக உயர்த்தியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 76 அடிப்படை புள்ளிகள் அதிகம். அதேபோல், வாடிக்கையாளர் சேவையின் முக்கிய அங்கமான கிளைம் செட்டில்மென்ட் ரேஷியோ (Claim Settlement Ratio) 94.4% ஆக உயர்ந்துள்ளது. Net Promoter Score (NPS) 55-லிருந்து 60 ஆக அதிகரித்துள்ளது. ஐந்து ஆண்டுகளாக இவர்களின் கிளைம் செட்டில்மென்ட் 90%-க்கு மேல் இருப்பது கவனிக்கத்தக்கது.
