வளர்ச்சி எப்படி இருக்கும்?
GlobalData வெளியிட்டுள்ள ரிப்போர்ட் படி, இந்திய ஜெனரல் இன்சூரன்ஸ் செக்டர் 2026 முதல் 10% CAGR வளர்ச்சி அடையும்னு கணிச்சிருக்காங்க. இதன் மூலம், 2026-ல் தோராயமா ₹3.6 லட்சம் கோடியா இருக்கிற மொத்த எழுதப்பட்ட ப்ரீமியம் (Gross Written Premiums), 2030-க்குள்ள ₹5.4 லட்சம் கோடியை எட்டும். 2025-ல் 8.5% வளர்ச்சி இருந்திருக்க, 2026-ல் கணக்கியல் மாற்றங்கள்னால 5.1% ஆக குறையுமாம். ஆனா, 2026-க்கு அப்புறம், பொருளாதாரம் வளர வளர, இன்சூரன்ஸ் ஊடுருவல் அதிகரிக்க அதிகரிக்க வளர்ச்சி மீண்டும் வேகமெடுக்கும்னு எதிர்பார்க்கிறாங்க.
ஹெல்த் & மோட்டார் தான் லிஃப்ட்!
இந்த மொத்த வளர்ச்சியில, ஹெல்த் மற்றும் மோட்டார் இன்சூரன்ஸ் தான் முக்கிய பங்கு வகிக்குது. 2025-ல் ஜெனரல் இன்சூரன்ஸ் ப்ரீமியங்கள்ல 72.6% இவங்க தான். அதுலயும், பெர்சனல் ஆக்சிடென்ட் அண்ட் ஹெல்த் (PA&H) செக்டர் 40.9% ப்ரீமியோட முதலிடத்தில் இருக்கு ( 2021-ல 35.7% இருந்து அதிகரிச்சிருக்கு). இந்த செக்டர் 2026-ல் 8.8% வளரும்னு எதிர்பார்க்கிறாங்க. செப்டம்பர் 2025 முதல் ரிடெயில் ஹெல்த் பாலிசிகளுக்கு GST விலக்கு அளிக்கப்பட்டதும், இன்சூரர்கள் OPD மற்றும் வெல்னஸ் கவரேஜ் போன்ற திட்டங்களை மேம்படுத்தி வாடிக்கையாளர்களின் செலவைக் குறைக்கவும் உதவுறதும் இதோட வளர்ச்சிக்கு முக்கிய காரணங்கள்.
மோட்டார் இன்சூரன்ஸ், 31.7% பங்குடன், எலக்ட்ரிக் வெஹிகிள்ஸ் (EV) மற்றும் அதோட மேம்பட்ட பாகங்கள் காரணமாக அதிக விலையுள்ள காப்பீடுகளால் வளர்ந்துட்டு வருது. Usage-based insurance, telematics-led underwriting போன்றவை இப்போ பரவலாகிட்டு வருது.
பாலிசி சீர்திருத்தங்கள் & உள்கட்டமைப்பு
அடுத்ததா, 2026 முதல் 2030 வரை, பாலிசிதாரர்களுக்கான பாதுகாப்பு, விரைவான கிளைம் செட்டில்மென்ட், விரிவான பேரழிவு அபாய பாதுகாப்பு போன்றவை வளர்ச்சிக்கு உதவும். 100% FDI, IRDAI-யோட வலுவான அதிகாரங்கள், காம்போசிட் லைசென்சிங் போன்ற சீர்திருத்தங்கள் முதலீட்டை ஈர்த்து, புதிய ப்ராடக்ட்ஸ் வரவும், டைர் II, டைர் III நகரங்கள்ல இன்சூரன்ஸ் ஊடுருவலை அதிகரிக்கவும் உதவும்.
ப்ராப்பர்ட்டி இன்சூரன்ஸ் செக்டர் (2025-ல் 20.2% ப்ரீமியம்) உள்கட்டமைப்புல செய்யப்படுற பெரிய முதலீடுகளால பயனடையும். 2026–27 காலகட்டத்துல உள்கட்டமைப்பு செலவு $128.6 பில்லியன் ஆக இருக்கும்னு எதிர்பார்க்கப்படுறதால, சின்ன நகரங்கள்லயும் வளர்ச்சி அதிகமாகும். இது ப்ராப்பர்ட்டி இன்சூரன்ஸ்க்கான தேவையை அதிகப்படுத்தும்.
என்ன பிரச்சனைகள் வரலாம்?
எல்லாம் நல்லா இருந்தாலும், சில சவால்களும் இருக்கு. சேவையின் தரம், வாடிக்கையாளர் புகார்கள் முக்கியமான பிரச்சனைகள். உலக அரசியல் பதற்றம், பருவநிலை மாற்றம் சார்ந்த இழப்புகள் லாபத்தை பாதிக்கலாம். கேட்டஸ்ட்ரோபி (Catastrophe) இழப்புகளை ரீ-இன்சூரர்கள் மாற்றி அமைக்கிறது, மோட்டார் இன்சூரன்ஸ் ப்ரீமியங்கள்ல செலவு அதிகரிப்பு, மேற்கு ஆசியால இருக்கிற பதற்றத்தால் கடல், விமானம், போக்குவரத்து (MAT) இன்சூரன்ஸ் பாதிக்கப்படுறது போன்றவையும் கவலை அளிக்குது.
