General Insurance Council, அனைத்து ரீடெய்ல் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளிலும் ஜனவரி 1, 2027 முதல் **10%** கட்டாய கோ-பேமெண்ட் (Co-payment) முறையை அறிமுகப்படுத்த பரிந்துரைத்துள்ளது.
மருத்துவமனைகளில் நடக்கும் அதிகப்படியான கட்டண வசூலை கட்டுப்படுத்த, General Insurance Council ஒரு அதிரடி பரிந்துரையை முன்வைத்துள்ளது. இதன்படி, ஜனவரி 1, 2027 முதல் அனைத்து ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளிலும் வாடிக்கையாளர்கள் தங்களின் பில்லில் 10% தொகையைத் தாங்களே செலுத்த வேண்டும்.
பையில் இருந்து எவ்வளவு குறையும்?
இந்த 10% கோ-பேமெண்ட் தொகைக்கு ₹5 லட்சம் வரை உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, இந்தத் தொகையை எந்தவிதமான ரைடர்கள் (Riders) மூலமும் தவிர்க்க முடியாது. வெறும் 10% என்று சொன்னாலும், இன்சூரன்ஸில் ஏற்கனவே கவரேஜ் இல்லாத சில செலவுகளையும் (Consumables, Administrative fees) சேர்த்தால், ஒட்டுமொத்தமாக ஒரு நோயாளி தனது பில்லில் சுமார் 19% தொகையை சொந்தமாக செலவிட வேண்டியிருக்கும் என சந்தை வல்லுநர்கள் கணிக்கின்றனர்.
IRDAI-ன் முடிவு என்ன?
இந்தத் திட்டம் இன்னும் சட்டமாக மாறவில்லை. இதற்கு IRDAI-ன் முறையான ஒப்புதல் தேவை. குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு இது கூடுதல் சுமையாக அமையுமா அல்லது இன்சூரன்ஸ் துறையில் இது மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதை regulators ஆராய்ந்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து செயல்படுவது போட்டி சட்ட விதிகளுக்கு (Competition rules) எதிராக அமைய வாய்ப்புள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது.
இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வராததால், தற்போதுள்ள பாலிசி விதிமுறைகளில் எந்த மாற்றமும் இல்லை. பாலிசிதாரர்கள் IRDAI வெளியிடும் அடுத்தகட்ட அறிவிப்புகளை கவனத்துடன் கவனிக்க வேண்டும்.
