Choice Institutional Equities நிறுவனம் Zen Tech மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளது. இதன் காரணமாக, 35x FY28E Earnings Per Share (EPS) மல்டிபிளை அடிப்படையாகக் கொண்டு, ₹2,150 என்ற இலக்கு விலையை நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் கம்பெனியின் வருவாய் பெருமளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Zen Tech நிர்வாகம், வெற்று வார்த்தைகளை விட செயல்திறனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக ப்ரோக்கரேஜ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டுகளான 2027-28 ஆம் ஆண்டுக்கான வருவாய் கணிப்பை (Revenue Guidance) சுமார் ₹4,000 கோடி என முன்கூட்டியே குறைத்து அறிவித்துள்ளது. இது சந்தை பலவீனத்தைக் குறிக்காமல், முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகளைச் சீரமைக்கும் ஒரு நேர்மறையான நடவடிக்கை எனப் பார்க்கப்படுகிறது.
நிறுவனத்தின் ஆர்டர் புக் (Order Book) வலுப்பெற்று வருகிறது. கடந்த நான்கு மாதங்களில் மட்டும் சுமார் ₹930 கோடி மதிப்புள்ள புதிய ஆர்டர்களை Zen Tech பெற்றுள்ளது. இதனால், மொத்த ஆர்டர் புக் தற்போது ₹1,427 கோடி ஆக உயர்ந்துள்ளது. இது, FY25 வருவாயை விட 1.5 மடங்கு அதிகமாகும். இதில் முக்கியமாக, அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்குள் சுமார் ₹1,100 கோடி ஆர்டர்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இது அடுத்த சில மாதங்களுக்கு நிலையான வளர்ச்சியை உறுதி செய்யும்.
மேலும், FY27-28 ஆம் ஆண்டுகளில் ஆர்டர் பெறுவதிலும், அதை நிறைவேற்றுவதிலும் பெரும் ஏற்றம் இருக்கும் என Choice Equities கணித்துள்ளது. ஐரோப்பிய யூனியன்-இந்தியா வர்த்தக ஒப்பந்தம் (EU-India trade agreement) ஐரோப்பிய சந்தைகளில் தடையற்ற அணுகலை வழங்கும். அத்துடன், பிற சர்வதேச வாடிக்கையாளர்களிடமிருந்தும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. இந்த உத்திசார்ந்த அனுகூலங்கள், நிறுவனத்தின் வருவாயை அதிகரிப்பது மட்டுமல்லாமல், பங்குகளின் மதிப்பீட்டையும் (Stock Re-rating) உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய சந்தை சரிவுக்குப் பிறகு, இந்தியாவின் பாதுகாப்பு தொழில்நுட்பத் துறையில் (Defense Technology) Zen Tech ஒரு கவர்ச்சிகரமான முதலீடாகத் திகழ்கிறது.