டிமெர்ஜர் (Demerger) & வருவாய் கணிப்பு
Vedanta தனது அலுமினியம், ஸ்டீல், ஆயில் & கேஸ், பவர் போன்ற பிரிவுகளை தனித்தனி நிறுவனங்களாக பிரிக்கும் திட்டத்தை வைத்துள்ளது. இதில் சில யூனிட்கள் வரும் ஜூன் மாதத்திற்குள்ளாக லிஸ்ட் ஆகும் என Nuvama கணித்துள்ளது. இந்த தனித்தனி நிறுவனங்கள், வலுவான கமாடிட்டி விலைகள் மற்றும் வால்யூம் வளர்ச்சியால், FY26 முதல் FY28 வரை 19% முதல் 42% வரை EBITDA காம்பவுண்ட் ஆனுவல் வளர்ச்சி விகிதத்தை (CAGR) எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வலுவான நிதிநிலை அறிக்கை
Vedanta, FY26 நிதியாண்டில் மிகச் சிறந்த நிதிச் செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது. வருவாய் ஆண்டுக்கு 15% அதிகரித்து ₹1,74,075 கோடி எட்டியுள்ளது. EBITDA-வும் 29% உயர்ந்து ₹55,976 கோடி ஆக பதிவாகியுள்ளது. சிறந்த செயல்பாடுகள், லாப வரம்பு அதிகரிப்பு மற்றும் கடன் குறைப்பு நடவடிக்கைகள் இதற்கு முக்கிய காரணங்கள்.
ப்ரோக்கரேஜ் நிறுவனங்களின் பார்வைகள்
- Investec: டிமெர்ஜருக்கு முந்தைய Vedanta-வின் ஒரு பங்குக்கான டார்கெட் விலையை ₹1,000 ஆக நிர்ணயித்துள்ளது. Q4 முடிவுகள் சிறப்பாக இருந்ததையும், அலுமினியம் வணிகத்தின் வலிமையையும் குறிப்பிட்டுள்ளது. அலுமினியம் வணிகத்திற்கு ₹606 மற்றும் பேஸ் மெட்டல்ஸ் உள்ளிட்ட Vedanta-விற்கு ₹319 என மதிப்பீடு செய்துள்ளது.
- Kotak Institutional Equities: ₹940 என்ற டார்கெட் விலையை தக்க வைத்துக் கொண்டுள்ளது. Vedanta-வின் அலுமினியம் பிரிவு, உள்நாட்டு சுரங்கங்கள் (Kurloi, Ghogharapalli, Sijimali) மூலம் செலவுகளைக் குறைத்து, வால்யூமை அதிகரிக்கும் என நம்புகிறது.
- CLSA: ₹835 என்ற 12 மாத டார்கெட் விலையை வழங்கியுள்ளது. Vedanta-வின் மேம்பட்ட காஸ்ட் ட்ராஜெக்டரி, கெப்பாசிட்டி விரிவாக்கம் மற்றும் டீலெவரேஜிங் ஆகியவை பங்கு விலையேற்றத்திற்கு உந்துசக்தியாக இருக்கும் என சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், தனித்தனி நிறுவனங்களாகப் பிரிவது முதலீட்டாளர்களுக்கு ஒவ்வொரு வணிகப் பிரிவின் நிதிநிலை பற்றிய தெளிவான பார்வையை வழங்கும்.
- Emkay Global: தனித்தனி வணிகங்களாகப் பிரிவது, டைவர்சிஃபைட் மைனிங் நிறுவனங்களை விட அதிக மதிப்பீடுகளைப் பெறவும், நிர்வாகத்தின் கீழ் சிறந்த மூலதன ஒதுக்கீட்டிற்கும் வழிவகுக்கும் என கருத்து தெரிவித்துள்ளது.
