நிஃப்டிindex-ல் புல்லிஷ் ரிவர்சல்!
சமீபத்தில் 24,571 என்ற குறைந்த புள்ளியிலிருந்து நிஃப்டி 1,770 புள்ளிகள் வரை மீண்டு வந்துள்ளது. இது சந்தையில் ஒரு பெரிய புல்லிஷ் ரிவர்ஸலைக் குறிக்கிறது. முக்கியமாக, நிஃப்டி அதன் 20, 50, 100, மற்றும் 200 நாள் Exponential Moving Averages (EMAs)-க்கு மேல் வெற்றிகரமாக வந்துள்ளது. இது தொடர்ந்து ஏற்றம் காணும் என்பதற்கான வலுவான அறிகுறியாகும். முக்கிய சப்போர்ட் லெவலாக 25,500–25,650 ஆகவும், ரெசிஸ்டன்ஸ் லெவலாக 25,863 மற்றும் 26,373 ஆகவும் கணிக்கப்பட்டுள்ளது.
HDFC செக்யூரிட்டிஸ் பங்குகள் பரிந்துரை
இந்த சூழலில், HDFC செக்யூரிட்டிஸ் நிறுவனம் இரண்டு பங்குகளை வாங்க பரிந்துரைத்துள்ளது. அதில் முதலாவதாக, Samvardhana Motherson International Limited பங்கினை ₹120 விலையில் வாங்கலாம் என தெரிவித்துள்ளது. இதற்கான ஸ்டாப்-லாஸ் ₹108 ஆகவும், டார்கெட் விலையாக ₹137 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பங்கு, ஒரு டவுன் ட்ரெண்ட் லைனில் இருந்து பிரேக் அவுட் ஆகி, உயர்ந்து வரும் டாப்ஸ் மற்றும் பாட்டம்ஸுடன் புல்லிஷ் ட்ரெண்டில் இருப்பதாக சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும், டெய்லி RSI 50-க்கு மேலும், MACD இண்டிகேட்டரில் புல்லிஷ் கிராஸ் ஓவர் ஏற்பட்டுள்ளதும் இதற்கு வலு சேர்க்கிறது.
அதேபோல, Bharat Forge Limited பங்கினையும் வாங்க பரிந்துரைத்துள்ளது HDFC செக்யூரிட்டிஸ். இதன் தற்போதைய பரிந்துரை விலை ₹1,515, ஸ்டாப்-லாஸ் ₹1,370 மற்றும் டார்கெட் விலை ₹1,700 என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பங்கு, 100-நாள் DEMA-வில் சப்போர்ட் எடுத்து மீண்டு வந்துள்ளது. இதன் பிரைமரி ட்ரெண்ட் புல்லிஷாக உள்ளது, உயர்ந்து வரும் டாப்ஸ் மற்றும் பாட்டம்ஸுடன் முக்கிய லாங்-டர்ம் மூவிங் ஆவரேஜ்களுக்கு மேல் டிரேட் ஆகி வருகிறது. டெய்லி RSI 50-க்கு மேல் இருப்பதால், தொடர்ந்து ஏற்றம் காண வாய்ப்புள்ளது. மேலும், ஒரு பிரைஸ் கரெக்ஷனுக்குப் பிறகு, இன்சைட் பார் கேண்டில் ஃபார்மேஷன் உருவாகி இருப்பது, மேலும் மேல்நோக்கி செல்வதற்கு முன் ஒரு தற்காலிக ஏற்ற இறக்கத்தைக் குறிக்கலாம்.