NHAI (National Highways Authority of India) இனி சாலை திட்டங்களை முடிக்க **80%** மரம் வளர்ப்பு மற்றும் **90%** செடிகள் உயிர்வாழும் விகிதத்தை கட்டாயமாக்கியுள்ளது. இந்த இலக்கை எட்டாத ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்குவதில் தாமதம் மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.
NHAI தனது புதிய விதிமுறைகளின்படி, இனி சாலை கட்டுமானப் பணிகளை முடிப்பதாக அங்கீகரிக்க, அந்தத் திட்டத்தில் 80% மரம் வளர்ப்பு மற்றும் நிலப்பரப்பு அலங்காரம் அவசியம் என்று அறிவித்துள்ளது. இந்த இலக்கை அடைந்தால் மட்டுமே நிறுவனங்களுக்கு Provisional Certificate of Completion (PCC) வழங்கப்படும்.
கட்டுமான நிறுவனங்களுக்கு புதிய சவால்
முன்பெல்லாம் சாலை மற்றும் பாதுகாப்பு வசதிகள் மட்டுமே முக்கியமாக பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது சுற்றுச்சூழல் விதிமுறை ஒரு கட்டாயத் தகுதியாக மாறியுள்ளது. இந்த 80% இலக்கை எட்டாத நிறுவனங்களுக்கு, ஒப்பந்தப்படி சேர வேண்டிய பணத்தை NHAI நிறுத்தி வைக்கும் (Financial withholdings). இது நிறுவனங்களின் பணப்புழக்கத்தை (Cash flow) நேரடியாக பாதிக்கும்.
எதற்கெல்லாம் பொருந்தும்?
இந்த கடுமையான விதிகள் அனைத்து வகையான ஒப்பந்த முறைகளுக்கும் பொருந்தும்:
- EPC (Engineering, Procurement and Construction)
- HAM (Hybrid Annuity Mode)
- BOT (Build-Operate-Transfer)
பராமரிப்பு கால சவால்கள்
திட்டம் முடிந்த பிறகு, பராமரிப்பு காலத்திலும் (O&M) நட்டப்பட்ட செடிகளில் குறைந்தது 90% உயிர்வாழ வேண்டும் என்பது கட்டாயம். ஒருவேளை செடிகள் காய்ந்துவிட்டால், அதே முதிர்ச்சியுடைய புதிய செடிகளை ஒப்பந்ததாரர் நட வேண்டும். இந்த கூடுதல் பராமரிப்பு செலவுகள் மற்றும் நிர்வாகக் கட்டணங்கள் வரும் காலாண்டுகளில் நிறுவனங்களின் லாப வரம்பில் (Profit margin) தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
முதலீட்டாளர்கள், கட்டுமான நிறுவனங்கள் இந்த புதிய சுற்றுச்சூழல் விதிகளை எப்படி கையாள்கின்றன மற்றும் இதற்காக கூடுதல் நிதி எவ்வளவு செலவாகிறது என்பதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
